Hair Care Tips: முடி உதிர்கிறதா?.. அப்போ முயல் இரத்தத்தை தேய்த்துப் பாருங்கள்..!

முயல் இரத்தத்தினை தலைக்கு தேய்ப்பதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்.

Rabbit Blood Hair Oil (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 14, சென்னை (Chennai): இன்றைய காலகட்டத்தில் அனைவரின் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதை இந்த முடி கொட்டுதல் தான். இந்த முடி உதிர்வதற்கு முக்கியமான காரணம் உடல் உஷ்ணம் மற்றும் மன அழுத்தம் தான். இதனை தடுப்பதற்காக பலர் பல வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை அனைத்தை விடவும் சிறந்தது என்றால் அது முயல் இரத்தம் (RABBIT BLOOD).

முடி உதிர்வை தடுக்கும் முறை: முதலில் முயல் இரத்தத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். அந்த முயல் இரத்தத்தில் காட்டன் துணிகளை போட்டு ஊற வையுங்கள். பின் அந்த துணியை மூன்று நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். பின் அந்த துணியை வெட்டி தேங்காய் எண்ணெய் போட்டுக் கொள்ள வேண்டும். Weather Update: அரபிக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... கனமழை அலெர்ட்!

இந்த முயல் இரத்த எண்ணையை தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு தலையில் தேய்த்து, மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம், உங்கள் முடி உதிர்வு பிரச்சனை விரைவில் நீங்கும். அதுமட்டுமின்றி 10 முதல் 20 நாட்களிலேயே புதிய முடிகள் வளர்வதையும் நீங்கள் காணலாம். இதன் மூலம் உங்கள் முடி கருகருவென அடர்த்தியாக இருக்கும்.