ASTRO (Photo Credit: Pixabay)

நவம்பர் 22, சென்னை (Astrology Tips): மேஷ ராசியில் உள்ள பரணி (Bharani) நட்சத்திரக்காரர்களே, உங்களுக்கு சென்ற 2024 ஆம் ஆண்டு தொழில் நஷ்டம் , நண்பர்களால் பிரச்சனை, காரிய தடை, குடும்பத்தில் பிரச்சனை, பண நெருக்கடி, கடன் தொல்லை போன்ற கெடு பலன்களை அனுபவித்து இருப்பீர்கள், இந்த நிலை வரும் மார்ச் 15 வரை தொடரும். Chicken Egg Poriyal Recipe: சிக்கன், முட்டை வைத்து இப்படி செஞ்சு பாருங்க.. அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

அதன் பின் உங்கள் வாழ்வில் புதிய வசந்தம் வீசும். நல்ல வேலை வாய்ப்பு, சம்பள உயர்வு, திருமண யோகம், புத்திர பாக்கியம், புதிய தொழில் துவங்குதல் போன்ற நல்ல பலன்களை இந்த ஆண்டு பெறுவீர்கள். தடைபட்ட காரியங்கள் நிறைவேறும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். இருப்பினும் விரைய செலவுகள் அதிகரிக்கும். பணம் வருவது போல் இருக்கும், வந்தவுடன் செலவழிந்து விடும். புதிய கடன் கிடைக்கும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவீர்கள். எதிரிகளின் தொல்லை மறையும். புதிய உற்சாகம் பிறக்கும்.

திருப்பரங்குன்றம் முருகனை வழிபடுங்கள். வெற்றி மேல் வெற்றி பெறுங்கள்.

உங்கள் மதிப்பெண் 80.

இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.