Weight Loss Methods: உடல் எடையை கட்டுப்படுத்த.., வாய் ருசியை கட்டுப்படுத்த முடியலையா?.. இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!

மசாலா பொரி, சுண்டல் உட்பட பல வகையான உணவுகளை நாம் தின்பண்டம் போலவும் எடுத்துக்கொள்ளலாம். இவை உடல் அதிகரிப்புக்கு வழிவகை செய்யாது. அதுகுறித்த விபரத்தை தெரிந்துகொள்ள தொடர்நது படிக்கவும்.

Weight Loss Methods: உடல் எடையை கட்டுப்படுத்த.., வாய் ருசியை கட்டுப்படுத்த முடியலையா?.. இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!
Weight loss (Photo Credit: Wikipedia)

பிப்ரவரி 29, சென்னை (Health Tips): இன்றளவில் எடை இழப்பு செய்ய முயற்சிப்போர், ஆரோக்கியமான உணவுகளின் மீது தங்களின் கவனத்தை செலுத்தாமல் டயட் என்ற பெயரில் முழுநேர பட்டினி கூட இருந்து வருகின்றனர். உண்மையில் எடை இழப்பு விஷயத்தில் ஆரோக்கியமான அளவான உணவே வளமான நன்மையை தரும். நாம் சாப்பிடும் உனவுகளில் அதிக கலோரிகள் இல்லாத வண்ணம் பார்த்துக்கொள்வது நல்லது. இன்று நாம் சுவையான மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட தின்பண்டங்கள் குறித்து காணலாம்.

முளைகட்டிய பச்சைப்பயிறு: மலிவு விலையில் கடையில் கிடைக்கும் முளைகட்டிய பச்சைப்பயிறு நார்சத்து கொண்டது. அதுமட்டுமல்லாது புரதம், ஊட்டச்சத்து ஆகியவையும் அதிகம் காணப்படுகிறது. இதனை அப்படியே அல்லது வெங்காயம், தக்காளி, வெள்ளரி, உப்பு-காரம் மசாலா சேர்த்தும் சாப்பிடலாம்.

வெஜிடபிள் கட்லட்: நமக்கு பிடித்த காய்கறிகளை நன்கு வேகவைத்து, அதனை கட்லட் போல செய்து சாப்பிடலாம். இதற்கு கேரட், பட்டாணி, உருளை, பீன்ஸ், போன்றவற்றை வேகவைத்து பிசைந்து பிரட் தூளில் சேர்த்து தோசைக்கல்லில் சுட்டு வேகவைத்து எடுத்து சாப்பிடலாம். KL Rahul Tendon Injury: இந்தியா - இங்கிலாந்து தொடரில் இருந்து முற்றிலும் விலகும் ராகுல்.. ஐ.பி.எல் நிலை என்ன?..! 

மசாலா கொண்டைக்கடலை: சன்னா என்று அழைக்கப்படும் கொண்டைக்கடலை தன்னகத்தே பல நன்மைகள் கொண்டது காஃகும். இதனை நீரில் நனைத்து கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகாய்தூள், சீரகம் ஆகியவை சேர்த்து மிதமான சூட்டில் வானெலியில் வரத்து சாப்பிட புரதசத்து நிறைந்த தின்பண்டம் தயார்.

வெள்ளரிக்காய்: புத்துணர்ச்சி கொடுக்கும் வெள்ளரியை தயிர் , புதினா இலை, உப்பு சேர்த்து சாப்பிட உடல் எடை குறைய உதவும். உடல் நீர் இழப்பை போக்கும் தன்மை கொண்ட வெள்ளரிக்காய், உடலுக்கு பல நன்மையையும் தரும். PM Modi Thanks to TN Peoples: தமிழ்நாட்டில் நான்பெற்ற அன்பும் அரவணைப்பும் மகத்தானது - பிரதமர் மோடி பெருமிதம்.! 

சுண்டல்: வேகவைத்து கொண்டைக்கடலை, காராமணி, பச்சைப்பயிறு போன்றவற்றை சாப்பிடுவதே சுண்டல் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏதேனும் ஒன்றை முதல் நாளில் ஊறவைத்து, மறுநாள் வேகவைத்து கடுகு-கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து தாளித்து சாப்பிட சுவையான தின்பண்டம் தயார். சுண்டலில் இருக்கும் ஊட்டச்சத்து, நார்சத்து பல நன்மையை உடலுக்கு வழங்கும்.

மசாலா பொரி: கடைகளில் விற்பனை செய்யப்படும் முறுக்கு, மிக்ஸர் என கரக்-மொறுக்கென சாப்பிட்டு பழகி அதனை வாய் தேடுகிறது என்றால், கடைக்கு சென்று பொரி வாங்கிவிட்டு, அதனுடன் தக்காளி, வெங்காயம், கேரட், மசாலா ஆகியவற்றை சேர்ந்து மசாலா பொரியாக சாப்பிட்டு ஆசையை தீர்க்கலாம். இது உடல் எடையை அதிகரிக்க வைக்காதது ஆகும்.

(The above story first appeared on LatestLY on Feb 29, 2024 06:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).