PM Modi Thanks to TN Peoples: தமிழ்நாட்டில் நான்பெற்ற அன்பும் அரவணைப்பும் மகத்தானது - பிரதமர் மோடி பெருமிதம்.!
PM Modi Visit Thoothukudi (Photo Credit: @NarendraModi X)

பிப்ரவரி 29, திருநெல்வேலி (Thoothukudi News): இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக தமிழ்நாடு வந்தடைந்த பிரதமர் மோடி, ரூ.17300 கோடி மதிப்பிலான நலத்திட்டப்பணிகளை தூத்துக்குடியில் தொடங்கி வைத்தார். முன்னதாக நேற்று முன்தினம் பல்லடத்தில் நடைபெற்ற 'என் மண் என் மக்கள்' யாத்திரை இறுதி பயணத்தில் தீவிர பரப்புரை பிரச்சாரமும் மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து முன்னேற்றம், சிதம்பரனார் துறைமுகத்திற்கு புதிய முனையம் அமைத்தல், உள்நாட்டு பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நீர்வழிக்கப்பல் பயணம், வாஞ்சி மணியாச்சி - திருநெல்வேலி, மேலப்பாளையம் - ஆரல்வாய்மொழி இரட்டிப்பு இரயில் பாதை போன்றவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ.4586 கோடி செலவில் உருவான நான்கு வழிச்சாலையை நாட்டுக்கு அர்பணித்தல் உட்பட பல நலத்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வாழ்த்துகளே உழைக்க உந்துகோல்: இந்த விஷயம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "திருநெல்வேலியில் நடைபெற்ற மாபெரும் பேரணியின் காட்சிகள் இவை. கடந்த இரண்டு நாட்களாக, தமிழகத்தைச் சேர்ந்த எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களிடம் இருந்து நான் பெற்ற அன்பும் அரவணைப்பும் மகத்தானது. எங்கள் நிகழ்ச்சிகளில் திரண்ட இளைஞர்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அளவற்றது. இத்தகைய வாழ்த்துகள் மக்களுக்காக இன்னும் கடினமாக உழைக்க எனக்கு வலிமையைத் தருகிறது. TMC Leader Arrested: மேற்குவங்கம் சந்தேஷ்காலி வன்முறை விவகாரத்தில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் அதிரடி கைது.! 

மண்ணின் மைந்தரை இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து அனுப்பினோம்: திமுகவின் இன்றைய விளம்பரம் நகைப்புக்குரியதாக உள்ளது. அவர்கள் இந்திய அறிவியலையும், இந்திய விண்வெளித் துறையையும் அவமதித்துள்ளனர், அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். திரு. எல்.முருகன் அவர்கள் தமிழக மண்ணின் மைந்தர். அவர் இந்த மாநிலத்தில் இருந்து வெற்றி பெறவில்லை, ஆனால் நாங்கள் அவருக்கு அமைச்சர் பதவியை அளித்து பெருமை சேர்த்துள்ளோம், மேலும் இந்தி பேசும் மத்தியப் பிரதேசத்திலிருந்து அவரை மாநிலங்களவைக்கு அனுப்பியுள்ளோம்.

திமுக அரசின் இழிவுச்செயல்: அயோத்தியில் நடந்த பிராண பிரதிஷ்டை ஒரு வரலாற்றுத் தருணம். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது திமுக வெளிநடப்பு செய்தது. திமுக நமது கலாச்சாரத்தை உண்மையிலேயே வெறுக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளை தமிழக மக்கள் பாராட்டினாலும், அதை ஊடகங்கள் அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க திமுக அரசு அனுமதிப்பதில்லை. இழிவானசெயல்! உண்மை கசப்பாக இருந்தாலும் சொல்ல வேண்டியது கட்டாயம்! திமுக முக்கிய அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தாமதப்படுத்தியது" என தெரிவித்துள்ளார்.