பிப்ரவரி 29, புதுடெல்லி (Sports News): விக்கெட் கீப்பிங், வலதுகை பேட்டிங் என அசத்தி வந்த கே.எல் ராகுல் (KL Rahul), சமீபத்தில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் இறுதி 2 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போனது. அவர் முதல் 2 போட்டிகளில் விளையாடிய நிலையில், தசைநார் காயம் காரணமாக தொடர்ந்து இலண்டனில் மருத்துவ சிகிச்சை பெறவும் அறிவுறுத்தப்பட்டார்.
தொடரை கைப்பற்றியது இந்தியா: இந்தியா - இங்கிலாந்து (India Vs England Test Series) அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியா முதல் போட்டி தவிர்த்து எஞ்சிய 3 போட்டிகளில் வெற்றிபெற்று 3 புள்ளிகளுடன் முன்னிலைபெற்று நடப்பு தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து அணி முதல் போட்டியில் மட்டும் வெற்றிபெற்ற நிலையில், எஞ்சிய ஐந்தாவது மற்றும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பயிற்சி எடுத்து வருகிறது.
நேரலையில் பார்க்க: மார்ச் மாதம் 07ம் தேதி முதல் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை நேரில் சென்று காணவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வீட்டில் இருப்போர் ஸ்போர்ட்ஸ் 18 (Sports 18) தொலைக்காட்சி மற்றும் ஜியோ சினிமா செயலி (Jio Cinema) ஆகியவற்றில் நேரலையில் காணலாம். PM Modi Thanks to TN Peoples: தமிழ்நாட்டில் நான்பெற்ற அன்பும் அரவணைப்பும் மகத்தானது - பிரதமர் மோடி பெருமிதம்.!
கே.எல் ராகுல் நிலை: இந்நிலையில், தசைநார் காயம் காரணமாக கே.எல் ராகுல் ஐந்தாவது இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் கலந்துகொள்ளமாட்டார். கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின்போது பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடியபோது தசைநார் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார். அதனைத்தொடர்ந்து உடல்நலம் தேறி இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றார்.
ஐ.பி.எல் போட்டியில் விளையாட வாய்ப்பு: தற்போது அவர் 3 போட்டிகளை தவறவிட்ட நிலையில், விரைவில் குணமாகி மார்ச் இறுதியில் தொடங்கும் ஐபிஎல் 2024 போட்டிகளில் கலந்துகொள்வார் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாகவும் இருக்கும் நிலையில், விரைவில் அவர் நாடுதிரும்பி போட்டியில் விளையாடுவர் என எல்எஸ்ஜி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னோ - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மார்ச் 24ல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.