நவம்பர் 10, கோவா (Sports News): 37வது தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகளை 2023, நேற்றுடன் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த 10 ஆயிரம் விளையாட்டு வீரர்கள், பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டனர்.
இந்த போட்டியின் முடிவில் மஹாரஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் 80 தங்கம், 69 வெள்ளி, 79 வெண்கலம் என 228 பதக்கங்களை தட்டிச்சென்று, அதிக பதக்கம் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தை பெற்றனர். Missouri Teacher Arrested: பள்ளி வளாகத்திலேயே பாலியல் உறவு, மாணவர்களுடன் உல்லாசம்.. 2 ஆசிரியைகள் கைது.!
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் 192 பதக்கத்தையும், மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் 112 புத்தகத்தையும், கேரளா மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் 87 புத்தகத்தையும் பெற்றனர். தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் 77 பதக்கத்தை வென்றனர். இந்நிகழ்வை நடத்திய கோவா மாநிலத்தை சேர்ந்தவர்கள் 27 பதக்கத்தை வென்றனர்.
கடந்த அக்.26ம் தேதி தொடங்கிய தேசிய விளையாட்டுகள் 2023 போட்டிகள், நேற்றுடன் கோலாகலமாக நிறைவுபெற்றது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக கோவா தேசிய விளையாட்டுப்போட்டிகளை முன்னின்று நடத்தி கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் இப்போட்டிகள் நடைபெற்றது.
🇮🇳India - National Games Final Medal Tally by State/UT (2023):#NationalGames2023 #medal #Olympics pic.twitter.com/QyEVW9m4E5
— JarvisData (@Jarvis_Data) November 10, 2023