Delhi Metro Holi Celebration Atrocity: மெட்ரோ இரயிலா? கட்டில் மெத்தையா?.. இளம்பெண்களின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்.! வீடியோ உள்ளே..!
இப்படியும் ஹோலி கொண்டாடலாமா? என கேள்வி எழுப்புவதை போல, இரண்டு இளம்பெண்கள் டெல்லி மெட்ரோ இரயிலில் நடந்துகொண்ட சம்பவத்தின் காணொளி வெளியாகி இருக்கிறது.

மார்ச் 23, புதுடெல்லி (New Delhi): இந்தியாவின் தலைநகரான டெல்லியில், மக்களின் பிரதான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வரும் மெட்ரோவில் (Delhi Metro), அவ்வப்போது வித்தியாசமான நிகழ்வுகள் நடைபெறுவது வாடிக்கையாக இருக்கின்றது. நடனம் ஆடுவது, கவர்ச்சி உடையில் வலம்வருவது, தனிமையில் காதல் ஜோடிகள் செய்ய வேண்டியதை மக்கள் முன்னிலையில் மெட்ரோ ரயில் பயணத்தில் மேற்கொள்வது என சர்ச்சைகள் தொடரும். Poco C61 Smartphone: மிகக்குறைந்த விலையில் அறிமுகமாகிறது போகோ நிறுவனத்தின் சி61 ஸ்மார்ட்போன்; பட்ஜெட் பிரியர்களுக்கு அசத்தல் அறிவிப்பு.!
சர்ச்சைக்குரிய வகையில் ஹோலி பண்டிகை சிறப்பிப்பு: இவ்வாறான செயல்களால் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் பயணம் செய்வோர் முகம் சுளிக்கும் நிலைமையும் உண்டாகும். இது தொடர்பாக பல்வேறு காணொளிகள் சர்ச்சைக்குரிய வகையில் வெளியாகி வைரலாகிய சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வட மாநிலங்களில் ஹோலி (Holi Festival) பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பலரும் தங்களுக்கு தெரிந்த வழிகளில் பண்டிகையை சிறப்பித்து வருகின்றனர். இதனிடையே டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இரண்டு இளம்பெண்கள், தங்களது முகத்தில் வர்ணங்களை பூசி கொண்டவாறு தனிமை காட்சிகளை மேலோட்டமாக அரங்கேற்றிய சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)