Poco C61 (Photo Credit: @IndiaPOCO X)

மார்ச் 23, புதுடெல்லி (Technology News): இந்திய ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில், குறுகிய காலத்தில் மக்களிடம் வரவேற்பை பெற்றது போகோ (Poco). சீன நிறுவனமான ஜியோமின் அங்கமான போகோ, தொடர்ந்து தனது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. ஸ்மார்ட்போன் விற்பனையில் முக்கிய சந்தையாக கருதப்படும் இந்தியாவில், வரும் மார்ச் 26ம் தேதி நண்பகல் 12:00 மணியளவில் போகோ நிறுவனம் தனது புதிய போகோ சி61 (Poco C61) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.

பல அம்சத்துடன் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்: சமீபத்தில் ரெட்மி நிறுவனம் தனது ஏ3 (Redmi A3) ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரம் முதல் அறிமுகம் செய்து இருந்ததது. இதற்கு போட்டியாக போகோ நிறுவனமும் தனது விலைகுறைந்த, பட்ஜெட் அளவிலான ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. போகோ அறிமுகம் செய்யும் சி51 ரக மாடல் ஸ்மார்ட்போன்கள் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விலை இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. Elephants Fight in Temple Festival: வாலை பிடித்து வம்பு; ஆத்திரத்தில் திருவிழா கூட்டத்தையே கதிகலங்க வைத்த யானை.! 

சி51 வெற்றிக்குப்பின் சி61: வட்ட வடிவிலான பிரத்தியேக கேமரா அமைப்பு, 90Hz புதுப்பிப்பு திறன், HD+ டிஸ்பிளே, 5000 mAh பேட்டரி உட்பட பல அம்சத்துடன் போகோ சி61 ஸ்மார்ட்போன் களமிறங்குகிறது. விரைவில் அதன் சிறப்பம்சங்கள் அனைத்தும் தெரியவரும். போகோ நிறுவனம் தனது சி51 மாடல் விற்பனையில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து, சி61ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

சி51 சிறப்பம்சங்கள்: போகோ சி51 (Poco C51) ஸ்மார்ட்போனில் மீடியா டெக் ஹெலோ ஜி31, 4GB ரேம், 64 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், 1 TB வரையில் ஸ்டோரேஜ் அதிகப்படுத்தும் திறன், `ஆண்ட்ராய்ட் 13 கோ எடிசன் OS, 6.52 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 400 நிட்ஸ் பிரைட்னஸ், 8 MP பிரைமரி கேமிரா, 5 MP செல்பி கேமிரா, 5000 mAh பேட்டரி திறனுடன் வெளியானது. குறைந்தபட்சமாக ரூ.5500 முதல் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.