Raa Pathu 2025: வைகுண்ட ஏகாதசி 2025; ராப்பத்து உற்சவ திருவிழா கொண்டாட்டம்.. தேதி, நேரம் குறித்த முழு விவரம் உள்ளே..!
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் ராப்பத்து உற்சவ திருவிழாவின் தேதி மற்றும் நேரம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
ஜனவரி 08, ஸ்ரீரங்கம் (Festival News): பூலோக வைகுண்டம் என வைகுண்டத்திற்கு இணையாக திருமால் தலங்களாக சொல்லப்படுவது, திருச்சி-ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலும், திருமலை-திருப்பதி ஏழுமலையான் கோவிலும் தான். இதில், வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் (Arulmigu Aranganatha Swamy Temple, Srirangam) உள்ளது. இவ்விரு தலங்களிலும் ஒரே மாதிரியான உற்சவங்கள் தான் நடத்தப்படும். இக்கோயிலில், நடப்பு ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா (Vaikuntha Ekadashi) திருநெடுந்தாண்டகம் (Thirunedunthandagam) நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி மாலை கோலாகலமாக தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கியது. Pagal Pathu 2025: வைகுண்ட ஏகாதசி 2025; பத்து நாள் கோலாகலமாக கொண்டாடப்படும் பகல்பத்து உற்சவ திருவிழா.. முழு விவரம் உள்ளே..!
ராப்பத்து:
நம்மாழ்வாருக்கு பெருமை சேர்த்த திருமங்கை ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, நாதமுனி காலத்தில் திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்பான திருமொழிப்பாடல்களையும், மற்ற ஆழ்வார்கள் பாடிய பாடல்களையும், பெரிய பெருமாள் கேட்டருளும் பொருட்டு, பகல்பத்து மற்றும் ராப்பத்து (Raa Pathu) உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. பகல்பத்து (Pagal Pathu) அல்லது திருமொழித் திருநாள் என்பது மார்கழி மாதத்தின் வளர்பிறை பிரதமை திதி முதல், தசமி திதி வரையான 10 நாட்களுக்கு நடைபெறும் உற்சவ திருவிழாவாகும். ஶ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது, பகல் பத்து-ராப்பத்து என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும்.
ராப்பத்து உற்சவம்:
பகல்பத்தின் 10வது நாள் உற்சவமானது, ஜனவரி 09ஆம் தேதி அன்று நடைபெறும். அன்றைய தினம் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்து அருள் தருவார். வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த பத்து நாட்கள் ராப்பத்து உற்சவம் (Raa Pathu Urchavam) என அழைக்கப்படுகிறது. அப்போது, அரங்கனுக்கு நாச்சியார் திருக்கோல அலங்காரம் செய்யப்படுகிறது. எட்டாம் நாள் வேடுவர்பறி திருவிழா அன்று நம் பெருமாள் தங்கக் குதிரையில் உலா வருவார். கடைசியாக ராப்பத்து 10ஆம் நாள் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடையும். ஸ்ரீரங்கத்தில், 2025ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி அன்று, 8ஆம் நாள் வேடுபரி தவிர மொத்தம் 9 நாட்களுக்கு ராப்பத்து உற்சவத்தின் போது, சொர்க்கவாசல் திறந்திருக்கும். Vaikuntha Ekadashi 2025: வாழ்க்கை செழிப்படைய வைக்கும் வைகுண்ட ஏகாதசி; விரத முறைகள், நல்லநேரம்., தகவல் இதோ.!
ராப்பத்து தேதிகள் மற்றும் நேரங்கள் குறித்த விவரங்கள்:
ஜனவரி 10, 2025 (வெள்ளிக்கிழமை)
வைகுண்ட ஏகாதசி - ராப்பத்து 1ஆம் நாள்
அதிகாலை 5.15 மணி முதல் இரவு 10.00 மணி வரை
சொர்க்க வாசல் திறப்பு
ஜனவரி 11, 2025 (சனிக்கிழமை) முதல் ஜனவரி 15 வரை (புதன்கிழமை)
ராப்பத்து 2வது நாள் முதல் ராப்பத்து 6வது நாள் வரை
மதியம் 1.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
சொர்க்க வாசல் திறப்பு
ஜனவரி 16, 2025 (வியாழன் கிழமை)
ராப்பத்து 7ஆம் நாள் (திருகைத்தல சேவை)
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
பரமபத வாசல் திறப்பு
ஜனவரி 17, 2025 (வெள்ளிக்கிழமை)
ராப்பத்து 8ஆம் நாள் (வேடுபரி)
சொர்க்கவாசல் திறப்பு இல்லை
ஜனவரி 18, 2025 (சனிக்கிழமை)
ராப்பத்து 9வது நாள்
மதியம் 1.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
சொர்க்க வாசல் திறப்பு
ஜனவரி 19, 2025 (ஞாயிற்றுக்கிழமை)
ராப்பத்து 10ம் நாள் (தீர்த்தவாரி)
காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
சொர்க்க வாசல் திறப்பு
(The above story first appeared on LatestLY on Jan 08, 2025 11:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

