Pagal Pathu 2025 (Photo Credit: Team LatestLY)

டிசம்பர் 31, ஸ்ரீரங்கம் (Festival News): பூலோக வைகுண்டம் என வைகுண்டத்திற்கு இணையாக திருமால் தலங்களாக சொல்லப்படுவது, திருச்சி-ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலும், திருமலை-திருப்பதி ஏழுமலையான் கோவிலும் தான். இதில், வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் (Arulmigu Aranganatha Swamy Temple, Srirangam) உள்ளது. இவ்விரு தலங்களிலும் ஒரே மாதிரியான உற்சவங்கள் தான் நடத்தப்படும். இந்தக் கோயிலில், நடப்பு ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா (Vaikuntha Ekadashi) திருநெடுந்தாண்டகம் (Thirunedunthandagam) நிகழ்ச்சியுடன் நேற்று (டிசம்பர் 30) மாலை கோலாகலமாக தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா இன்று (டிசம்பர் 31) தொடங்கியது. Vaikuntha Ekadashi 2025: தொடங்கிய வைகுண்ட ஏகாதசி விழா.. சொர்க்கவாசல் என்று திறப்பு தெரியுமா?!

பகல்பத்து:

பகல்பத்து (Pagal Pathu) அல்லது திருமொழித் திருநாள் என்பது மார்கழி மாதத்தின் வளர்பிறை பிரதமை திதி முதல், தசமி திதி வரையான 10 நாட்களுக்கு நடைபெறும் உற்சவ திருவிழாவாகும். இவ்விழாவின் போது திருமால் விதவிதமான அலங்காரங்களிலும், விதவித வாகனங்களில் காட்சி தருவார். ஶ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது பகல் பத்து-ரா பத்து என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று தொடங்கியது. இதனையடுத்து, பகல்பத்து நிகழ்வுகள் இன்று (டிசம்பர் 31), திருமொழி திருநாள் நிகழ்வுடன் காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுவார். முதலில் காலை 8.30 மணிக்கு நம்பெருமாள் (Sri Namperumal) அர்ஜூன மண்டபம் வந்தடைவார். இதனையடுத்து, காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை திவ்யபிரந்த பாடல்களை அரையர்கள் பாடுவர்.

பகல்பத்து உற்சவம்:

அர்ஜூன மண்டபத்தில் இருந்து இரவு 7 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். நாளை (ஜனவரி 01) முத்தங்கி சேவையில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தர இருக்கிறார். மொத்தம் 21 நாட்கள் பகல்பத்து - ரா பத்து உற்சவம் நடைபெறும். பகல்பத்தின் 10வது நாள் உற்சவமானது, ஜனவரி 09ஆம் தேதி அன்று நடைபெறும். அன்றைய தினம் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்து அருள் தருவார்.