Saffron (Photo Credit: Indiamart.com / Amazon.com)

நவம்பர் 27, சென்னை (Health Tips): இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு பழகிவிட்ட நாம், தினமும் ஓயாது உழைத்து வருகிறோம். இதனால் நமது உடலில் இருக்கும் சக்திகள் விரயமாகின்றன. அதனை மீட்டெடுக்க சத்துள்ள பொருட்களை சாப்பிட வேண்டும். இன்று உடலுக்கு நன்மை தரும் குங்குமப்பூ குறித்து தெரிந்துகொள்ளலாம்.

குங்குமப்பூ (Saffron Flower Benefits Tamil) சரும பராமரிப்பு, உடல்நலம் உட்பட பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை அடிக்கடி நாம் உணவில் சேர்த்துக்கொள்வது பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. அதேவேளையில், குங்குமப்பூவினை சரியான அளவில் எடுத்துக்கொள்வது அவசியமான ஒன்றாகும்.

குங்குமப்பூ உடல் எடையை குறைக்க, மூட்டுவலி தீர உதவி செய்கிறது. இதனை பாலில் கலந்தும் குடிக்கலாம். குங்குமப்பூவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், சோடியம், பொட்டாசியம், இரும்புசத்து, கார்போ ஹைட்ரேட், வைட்டமின் சி தனிமனித உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமானவை ஆகும். Kantara Chapter 1 FirstLook: காந்தாரா படத்தின் முதல் பார்வை வீடியோ வெளியீடு: அட்டகாசமான தோற்றத்தில் ரிஷப் ஷெட்டி.. தெறிக்கவிடும் காட்சிகள்.! 

இதில் இருக்கும் மருத்துவ பண்புகள் மன ஆரோக்கியத்திற்கு சிறந்த மருந்து ஆகும். நினைவாற்றல் அதிகரிக்க குங்குமப்பூ பேருதவி செய்கிறது. இதனால் கற்றல் திறன் மேம்படுகிறது. அல்சைமர் எனப்படும் மூளை தொடர்பான பிரச்சனைக்கும் மருந்தாக இருக்கிறது.

உடல் எடையினை குறைப்பதில் முக்கிய பங்காற்றும் குங்குமப்பூ, மெட்டபாலிசத்தை தூண்டி பசியை கட்டுப்படுத்தும். வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதால், குறித்த அளவிலான கலோரியையே உட்கொள்ள உதவும். அதேபோல, உடலில் இருக்கும் கேடான கொழுப்புகளையும் வெளியேற்றி, திசுக்கள் சேதப்படுத்தப்படும் வாய்ப்பினை குறைக்கும்.

இதய பிரச்சனைகளுக்கு தீர்வை தரும் குங்குமப்பூ, ஆக்சிஜனேற்ற பண்புகளை திறம்பட செயல்படவைக்கும், இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். நமது உடலில் இருக்கும் நல்ல இரசாயனங்களை தொடர்ந்து ஊக்குவித்து, புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்புள்ள பிளவனாயிடு புஞ்சைகளை தடுத்து புற்றுநோய் இருந்தும் நம்மை குங்குமப்பூ பாதுகாக்கிறது.

இயந்திரவியல் தன்மை கொண்ட மனிதனின் இன்றைய உடலியக்க நடவடிக்கை காரணமாக ஏற்படும் மூட்டு வலி சார்ந்த பிரச்னையை குங்குமப்பூ குறைக்க உதவி செய்யும். Facebook Hacking Ducktail Malware: பேஸ்புக் பிசினஸ் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு அதிர்ச்சி: புதிய வைரஸை பயன்படுத்தி சைபர் குற்றம்.. உஷார் மக்களே.! 

Note: குங்குமப்பூவை மிகக்குறைந்த அளவு மட்டுமே உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் அதுசார்ந்த உடல் உபாதைகளுக்கு உட்பட நேரிடும். சந்தேகம் இருப்பின் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.