நவம்பர் 27, புதுடெல்லி (Technology News): சர்வதேச அளவில் தொழில்நுட்பத்தை (Technology) மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் சூழலில், அதனை தவறாக பயன்படுத்தும் நபர்களால் எங்கோ ஓர் இடத்தில் அப்பாவி பாதிக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
சமீபகாலமாகவே இணையவழியில் (Cyber Crimes) அதிகரிக்கும் குற்றங்களை தடுக்க, புதுப்புது தொழில்நுட்பங்களை மோசடியாளர்கள் (Malware) உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில், தற்போது Ducktail என்ற புதிய வைரஸை சைபர்கிரைம் மோசடியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்த Ducktail வைரஸ் மூலமாக சைபர் குற்றவாளிகள் சமூகத்தில் நிதி-நிர்வாகம் சார்ந்த துறையில் பணியாற்றும் நபர்கள், அதுசார்ந்த முகநூல் பக்கங்கள் மற்றும் அதனை நிர்வகிக்கும் நபர்களை குறிவைத்து வைரஸ் (Ducktail Malware Attack) தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.
பாதிக்கப்படக்கூறியவர்களுக்கு சாதரணமாக தோன்றும் லிங்கை அனுப்பி, அதனை திறந்து பார்த்தால் பயனர்களின் தகவலை திருடும் வகையில் Ducktail வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. LPG Cylinder Truck Overturned: தறிகெட்டு ஓடிய சிலிண்டர் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து: ஒருவர் பலி., 6 பேர் படுகாயம்.!
இந்த வைரஸ் செயல்பாட்டை தொடங்கிய 5 நிமிடங்களில் நமது கூகுள், மைக்ரோசாப்ட் எட்ஜ் (Google & Microsoft Edge Browsers) உட்பட அனைத்து ப்ரவுசர்களை ஆராய்ந்து, நமது கணக்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களை திருடுகிறது.
இதனை வைத்து மோசடியாளர்கள் நமது விபரங்களை பெற்று மேற்படி மோசடியை பல வகைகளில் தொடருகின்றனர். முகநூல் வழியாக தொடங்கியுள்ள Ducktail சார்ந்த மோசடியை சைபர் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதனால் முன்பின் அறியாத நபர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் லிங்குகளை திறக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் அவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். தொழிலதிபர்கள், பெருநிறுவனங்களின் பணியாற்றும் மனிதவள ஆற்றல் மேம்பாட்டாளர்கள் உட்பட பலரின் முகநூல் கணக்குகள் முதலில் குறிவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக், வாட்சப் போன்றவற்றில் பிசினஸ் கணக்குகள் (Facebook Business Account) வைத்துள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.