Kantara Chapter 1 Tamil (Photo Credit: YouTube)

நவம்பர் 27, சென்னை (Cinema News): கடந்த 2022ம் ஆண்டு ரூ.16 கோடி பொருட்செலவில், கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் (Rishabh Shetty) எழுத்து மற்றும் இயக்கம், நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா (Kantara).

கன்னட மொழியில் வெளியாகி, பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியீடு செய்யப்பட்ட திரைப்படம் ரூ.500 கோடிகளை கடந்து வசூல் மற்றும் வரவேற்பு சாதனை செய்தது.

கர்நாடகா - கேரளா மாநிலங்களின் எல்லைப்பகுதியில் உள்ள மக்களால் வணங்கப்பட்டு வரும் பஞ்சுருளி (God Panjuruli) தெய்வத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம், ஒட்டுமொத்த இந்தியாவை மட்டுமல்லாது உலகளவிலான திரை ரசிகர்களையும் திரும்பிப்பார்க்க வைத்தது. Facebook Hacking Ducktail Malware: பேஸ்புக் பிசினஸ் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு அதிர்ச்சி: புதிய வைரஸை பயன்படுத்தி சைபர் குற்றம்.. உஷார் மக்களே.! 

Kantara Chapter 1 (Photo Credit: YouTube)

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க பஞ்சுருளி தெய்வம் ரிஷப் ஷெட்டிக்கு அனுமதி வழங்கவே, ஹோம்பலே பிலிம்ஸ் (Hombale Films) நிறுவனத்தின் தயாரிப்பில் படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது.

ரூ.125 கோடி பட்ஜெட்டில், அஜனீஷ் லோகநாத் இசையில், ரிஷப் செட்டி, சப்தமி கௌடா (Sapthami Gowda), ஊர்வசி ரௌடலா (Urvashi Rautela[), கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி, பிரகாஷ் துமினேட் ஆகியோரின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், படத்தின் முதற் பார்வை தொடர்பான வீடியோ படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.