Couple Captured by Relations of Illegal Affair: கள்ளக்காதலியுடன் தனிமையில் இருந்த அரசியல்கட்சி பிரமுகரை வெளுத்து வாங்கிய பெண்ணின் உறவினர்கள்.! ஐயோ அம்மா கதறல்..!
கணவரின் கண்டிப்பையும் மீறி செயல்பட்ட பெண்ணின் கள்ளக்காதல் பழக்கத்தை ஊரறிய அம்பலப்படுத்திய கணவரின் அதிரடி செயல்பாடுகள் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பிப்ரவரி 26, நல்கொண்டா (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டம், அடிவுலப்பள்ளி மண்டல் பகுதியில், காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக இருந்து வருபவர் குரலெட்டி ஸ்ரீனிவாஸ். இவர் அகுடிடேவுலப்பள்ளி தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ பட்டுல லட்சுமணரெட்டியின் ஆதரவாளர் ஆவார்.
திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல்: எம்.எல்.ஏ செல்வாக்கில் ஊரில் செல்வந்தர் போலவும், முக்கிய பிரமுகராகவும் இவர் வலம்வந்து இருக்கிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திய ஸ்ரீனிவாஸ், அவ்வப்போது தனது கள்ளக்காதலியுடன் நெருக்கத்தில் இருந்து வந்துள்ளார்.
எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்த உறவு: ஒருசில சமயங்களில் கள்ளக்காதல் ஜோடி பெண்ணின் வீட்டிலும், ஸ்ரீனிவாசன் வீட்டிலும் உல்லாசமாக இருந்து வந்துள்ளது. இந்த கள்ளக்காதல் விவகாரம் பெண்ணின் கணவருக்கு தெரியவரவே, அவர் கள்ளக்காதல் ஜோடியை கண்டித்து இருக்கிறார். ஆனால், இவர்களின் கள்ளக்காதல் உறவு தொடர்ந்து வந்துள்ளது. R Ashwin & R Sharma Made History: புதிய சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாகிய அஸ்வின், ரோஹித்.. அசத்தல் விபரம் இதோ.!
வெளுத்து வாங்கிய உறவினர்கள்: இதனால் ஒருகட்டத்திற்கு மேல் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர், அவர் தரப்பு உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து பெண்ணை கையும்-களவுமாக பிடிக்க திட்டமிட்டு இருக்கிறார். சம்பவத்தன்று கள்ளக்காதல் ஜோடி தனிமையில் இருக்க, பெண்ணின் கணவர் அவரது உறவினர்களுடன் சேர்ந்து தனிமையில் கொஞ்சி குலாவிய கள்ளக்காதல் ஜோடியை பிடித்து அடித்து நொறுக்கினர்.
அதிகாரிகள் விசாரணை: காவல் துறையினரும் நிகழ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு, கள்ளக்காதல் ஜோடி பிடிக்கப்பட்டது. இதன்பேரில் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது. தற்போது வரை வழக்குப்பதிவு செய்ததற்கான தகவல்கள் இல்லை. கள்ளக்காதல் ஜோடி பலமுறை பெண்ணின் கணவரை கொலை செய்யவும் முயற்சித்து இருக்கிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)