Yuvraj Singh (Photo Credit: @OpIndia_in X)

செப்டம்பர் 23, டெல்லி (Delhi News): மத்திய அரசு சமீபத்தில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளை இந்தியாவில் தடை செய்தது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் மற்றும் ராபின் உத்தப்பா மற்றும் முன்னாள் டி.எம்.சி எம்.பி.யும் நடிகருமான மிமி சக்ரவர்த்தி, பெங்காலி நடிகர் அங்குஷ் ஹஸ்ரா ஆகியோரையும் மத்திய புலனாய்வு நிறுவனம் விசாரித்துள்ளது. இதே வழக்கில் நடிகர் சோனு சூட்டுக்கு நாளை (செப்டம்பர் 24) புதன்கிழமை ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. PAK Vs SL: பாகிஸ்தான் - இலங்கை அணிகள் நாளை பலப்பரீட்சை..!

ஆன்லைன் சூதாட்ட செயலி:

இந்நிலையில், 1xBet என்ற ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் (Illegal Online Betting App) தொடர்புடைய பணமோசடி வழக்கில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிடம் (வயது 43) அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனையடுத்து, இன்று டெல்லியில் அமலாக்க இயக்குநரகம் (ED) முன் விசாரணைக்கு ஆஜரானார். வழக்கின் விசாரணை அதிகாரி, அவரிடம் விசாரணை மேற்கொண்டு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.

பணமோசடி:

இதுகுறித்த விசாரணையில், பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், நேரடி மற்றும் மறைமுக வரிகளை பெருமளவில் ஏய்ப்பு செய்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், அத்தகைய தளங்களுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் விரிவான விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக, இன்னும் சில விளையாட்டு வீரர்கள், திரைப்பட நடிகர்கள், ஆன்லைன் செயலியில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் பிரபலங்கள் வரும் நாட்களில் விசாரிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.