Love Affair Case UP (Photo Credit: @TrueStoryUP X)

செப்டம்பர் 23, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்த இசைக் கலைஞர் ராம்ஃபர். இவர், மீரா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார். அவரது தாய் மாமா பசந்த்லால், அவருக்கு ரூ.30,000க்கு இசைக்குழு செட் வாங்கிக் கொடுத்தார். தனது தாய் மாமாவை தனது தந்தையைப் போல நினைத்தார். இதனால், இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். Road Accident: கார் - லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்.. 4 பேர் உடல் கருகி பலி..!

கணவர் கொலை:

இந்நிலையில், மீராவுக்கும் பசந்த்லாலுக்கும் இடையே தகாத உறவு இருந்தது. இதற்கு தடையாக இருந்த ராம்ஃபரை கொல்ல திட்டம் தீட்டினார்கள். கொலை செய்ய பசந்த்லால் தனது நண்பரின் உதவியை நாடினார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து ராம்ஃபரை கொடூரமாக கொலை (Murder) செய்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மீரா மற்றும் தாய் மாமா பசந்த்லால், அவரது நண்பர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.