Wedding DJ Ends Violence: நொடிப்பொழுதில் கலவரமாக கல்யாண வீடு; நாற்காலியால் நடந்த தாக்குதலில் பெண் உட்பட 2 பேர் படுகாயம்..!

உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் சூழ திருமணத்தை ஏற்பாடு செய்து, அவர்கள் முன்னிலையிலேயே இசைக்கச்சேரியில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பாக பிரிந்து திருமண வீட்டார் மோதிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

Wedding DJ Ends Violence: நொடிப்பொழுதில் கலவரமாக கல்யாண வீடு; நாற்காலியால் நடந்த தாக்குதலில் பெண் உட்பட 2 பேர் படுகாயம்..!
UP Marriage Violence (Photo Credit: @ManojSh28986262 X)

பிப்ரவரி 10, லக்னோ (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, குங்கே நவாப் பூங்கா பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில், நேற்று தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த திருமணத்தின்போது, இருதரப்பு உறவினர்களும், நண்பர்களும் திரளாக கலந்துகொண்டு திருமணத்தை சிறப்பித்து இருந்தனர். இந்நிலையில், திருமண நிகழ்வின்போது, முந்தைய நாளின் மாலை நேரத்தில் டிஜே (DJ Music Function Ends Fight) கச்சேரிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்துள்ளது. டிஜே கச்சேரி தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென இருதரப்பு தகராறு ஏற்பட, திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் கடுமையாக நாற்காலிகளை உடைத்து மோதிக்கொண்டனர். 4 Years Of Epic Neyveli Selfie: விஜய் ரசிகர்களால் மறக்க முடியாத நாள்; செல்பி எடுத்து ரசிகர்களை ஆட்பறிக்கவைத்த இளைய தளபதி.. நெய்வேலி அதிர்ந்த நாள் இன்று.! 

அடிதடி சம்பவத்தில் பகீர் வீடியோ வைரல்: இவர்களின் சண்டையை தடுக்கச்சென்ற பெண்ணின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். திருமண நிகழ்வில் நடந்த கலவரத்தால் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அமினாபாத் காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து திருமண வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் புகார் கொடுக்க தயாராக இல்லை என்பதால், காவல் துறையினர் இருதரப்பையும் அமைதிப்படுத்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண்மணி வசீர்கஞ்ச் பகுதியில் வசித்து வரும் அக்சரா, பிறர் கைஸர்பாக் பகுதியை சேர்ந்த மஹாக், பல்வந்த் சோனகர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Feb 10, 2024 02:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).