Vijay Selfie in Neyveli (Photo Credit: @ActorVijay X)

பிப்ரவரி 10, லக்னோ (Uttar Pradesh News): சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்.பி பிலிம்ஸ் கிரியேட்டர்ஸ், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில், கடந்த 2021 13 ஜனவரி அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வரவேற்பை பெற்று பட்டையை கிளப்பிய திரைப்படம் மாஸ்டர் (Master). லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் (Actor Vijay), விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, பாக்யராஜ், நாசர், ரம்யா சுப்பிரமணியன், சாய் தீனா, ரமேஷ் திலக், மகாநதி சங்கர், பூவையார், ஸ்ரீமான் உட்பட பலர் நடித்திருந்தனர்.

மாஸ்டர் கதைக்களம்: சிறார்களை தனது கைப்பாவையாக பயன்படுத்தி, குற்ற செயல்களில் ஈடுபடுத்தும் வில்லனுக்கும் - அவர்களை எதிர்பாராத விதமாக சீர்திருத்த பள்ளியில் சந்தித்து அவர்களின் பிரச்சினையை புரிந்து நல்வழிப்படுத்தும் ஆசிரியருக்கும் இடையேயான கதைக்களம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரலில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த சூழ்நிலையில், கொரோனா காரணமாக அடுத்தடுத்த பின்னடைவு ஏற்பட்டு 2021 பொங்கலுக்கு படம் வெளியானது. Lucknow Shocker: மதுபானம் அருந்தும் ஆண்கள் கூட்டம் நடுவே நடனமாடும் இளம்பெண்; நெட்டிசன்கள் கண்டனத்தை குவித்த அதிர்ச்சி வீடியோ.! 

விஜய் ரசிகர்களால் மறக்க முடியாத நாள் இன்று: ரூபாய் 135 கோடி பொருட்செலவில் தயாரான இந்த திரைப்படம் ரூ. 300 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் மட்டும் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் நடைபெற்று வந்தபோது, விஜய் ரசிகர்கள் திரளாக என்.எல்,சி வாயில் பகுதியில் நுழைந்து விஜயை காண வேண்டும் என ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து ரசிகர்கள் தனக்காக காத்திருப்பதை உணர்ந்து கொண்ட விஜய், ரசிகர்கள் முன்பு பிப்ரவரி 10, 2020 அன்று தோன்றி செல்பி எடுத்துக் கொண்டார்.

செல்பியால் ரசிகர்களை கவரும் விஜய்: இந்த செல்பி விஜய் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. அதற்கு பின் தற்போது கோட் (G.O.A.T) திரைப்படத்தில் மட்டுமே நடிகர் விஜய் செல்பி எடுத்துக் கொண்டார். மாஸ்டர் படப்பிடிப்பில் செல்பி எடுத்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதனை ரசிகர்கள் தற்போதும் நினைவுகூர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். எதிர்வரும் 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக வெற்றி கழகம் என்னும் அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய், அரசியல் பற்றி முடிவு எடுக்காத சமயத்தில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்திற்கு இன்று வரை எதிர்பார்ப்பு குறையவில்லை.

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுத்த காட்சிகள்:

பாண்டிச்சேரியில் நடைபெற்ற G.O.A.T படப்பிடிப்பின்போது விஜய் செல்பி எடுத்துக்கொண்ட காட்சிகள்:

கடந்த டிசம்பர் மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பினை தொடர்ந்து, மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கச்சென்ற நடிகர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அவர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.