Anant Ambani and Radhika Merchant Wedding Date and Event Schedule: ஆனந்த் அம்பானி - ராதிகா தம்பதியின் திருமண தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

ஜியோ உலக மையத்தில் வைத்து ஆனந்த் - ராதிகா ஆகியோரின் திருமணம் வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. அதற்கான பத்திரிக்கை வெளியாகி திருமண தேதி உட்பட பிற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Anant Ambani -Radhika Merchant Wedding (Photo Credit: @ANI X / @ANI_Digital X)

மே 30, மும்பை (Mumbai): உலக தொழிலதிபர்களின் ஒருவரும், இந்திய தொழிலதிபர்களின் முதன்மையானவருமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி - நிதா அம்பானி தம்பதியின் மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும், அவரின் காதலியான ராதிகா (Anant Ambani - Radhika Merchant Wedding) மெர்சண்ட்டுக்கும் திருமணம் நடக்க விறுவிறுப்புடன் ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமணத்திற்கு முந்தைய வரவேற்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்த நிலையில், ஆனந்த் அம்பானி - ராதிகா தம்பதியின் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் வைத்து ஜூலை 12ம் தேதி நடைபெறுகிறது. இந்த திருமணம் இந்து முறையில் நடைபெறுகிறது. Crocodile Found Near Village: குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலை; அலேக்காக தூக்கி ஆற்றில் விட்ட வனத்துறை.! 

ஜூலை 12ம் தேதி சுப வைபவ கொண்டாட்டத்துடன் தொடங்கும் திருமண நிகழ்ச்சி, சனிக்கிழமை ஆசீர்வாத நிகழ்ச்சி அதனைத்தொடர்ந்து ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை அன்று மங்கள உற்சவ் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த திருமணத்திற்கு இந்திய அளவிலும், உலகளவிலும் பல பிரபலங்கள் வருகின்றனர். அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

திருமண பத்திரிகை உங்களின் பார்வைக்கு:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement