JIO Logo (Photo Credit: Wikipedia)

ஆகஸ்ட் 19, சென்னை (Technology News): முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக இலவச சிம் விநியோகம் செய்து தனது தொலைத்தொடர்பு நிறுவனத்தை தேசிய அளவில் பிரபலப்படுத்திய ஜியோ நிறுவனம், தற்போது தனது சேவைக்கு பல சிறப்பம்சங்கள் மற்றும் சலுகையுடன் கட்டணம் வசூலித்து வருகிறது. இதனிடையே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது மாதாந்திர குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகை ரூ.249 திட்டத்தை நீக்கி இருக்கிறது.

ஜியோ ப்ரீபெய்டு திட்டத்தில் மாற்றம் :

இந்த நடவடிக்கை மூலமாக ஜியோ நிறுவனத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா மட்டும் பயன்படுத்தும் வகையிலான ரீசார்ஜ் பேக் இனி செயல்பாட்டில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டமாக ரூ.299 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ப்ரீபெய்டு திட்டத்தில் ரூ.249 மாற்றப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதிப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. கட்டாயம் அவர்கள் மாதத்திற்கு ரூ.300 செலவிட்டாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தா வந்துருச்சுல்ல.. உலகின் முதல் கர்ப்ப ரோபோ.. குழந்தையை பெற்றெடுக்கும் ரோபோக்கள்.! 

ரூ.249 திட்டம் நீக்கப்பட்டதால் பயனர்கள் அவதி :

ஜியோவின் ரூ.189, ரூ.198, ரூ.239 ஆகிய திட்டங்கள் இன்னும் செயல்பாட்டில் இருக்கும் நிலையில், 1 ஜிபி டேட்டா ரூ.249 திட்டம் பலருக்கும் பயனுள்ளதாக இருந்தது. இந்த திட்டம் நீக்கப்பட்டுள்ளது ஜியோ பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமீப காலமாகவே ஏர்டெல், பிஎஸ்என்எல் உட்பட பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஜியோ நிறுவனத்தின் சிம்முக்கு மாறிவரும் நிலையில், இந்த அறிவிப்பு அவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.