Car Tractor Accident: கார் - டிராக்டர் மோதி பயங்கர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாப பலி.! திருமண வீட்டாருக்கு நேர்ந்த சோகம்.!

சாலைகளில் அதிவேகம் என்பது எப்போதும் ஆபத்தையே பரிசாக தரும் என்பதை உணர்த்திடும் வகையில் பல விபத்துகள் தினமும் நடந்துகொண்டு இருக்கின்றன. பீகார் மாநிலத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து காணப்படுகிறது.

Khagaria Accident 18-March-2024 (Photo Credit: @ANI X)

மார்ச் 18, ககாரியா (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள ககாரியா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 31ல் நடந்த விபத்தில், 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர், மீண்டும் திரும்பிக்கொண்டு இருந்துள்ளனர்.

7 பேர் பலி: இவர்கள் டிராக்டரில் பயணம் செய்த நிலையில், அவ்வழியே வந்த கார் ஒன்று அதிவேகமாக வந்து மோதியதில் இரண்டு வாகனமும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் இரண்டு வாகனங்களில் பயணம் செய்தவர்களில், 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Singer Mangli Satyavathi Rathod: கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.! 

அதிகாரிகள் விசாரணை: விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்படி விபரங்கள் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு வருகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement