Bra File Pic (Photo Credit: Pixabay)

மார்ச் 10, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் (Tumkur) மாவட்டம், எஸ்.எஸ்.ஐ.டி., எஸ்.எஸ்.புரம், அசோக் நகர் பகுதிகளில் உள்ள பெண்கள் தங்கும் விடுதி, பெண்கள் வசிக்கும் வீடுகளில், பெண்களின் உள்ளாடைகள் தொடர்ந்து மாயமாகி வந்தன. இந்த விஷயம் குறித்து வீடு மற்றும் விடுதி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் உள்ளாடையை திருடும் மர்ம ஆசாமியை கண்காணித்து பிடிக்க கண்காணிப்பு கேமிராக்களும் ஆய்வு செய்யப்பட்டன. Gulfam Singh Yadav: பாஜக பிரமுகர் 3 பேர் கும்பலால் ஊசி செலுத்தி கொடூர கொலை; உபி-யில் பரபரப்பு.!

25 வயது இளைஞர் கைது:

இந்நிலையில், சம்பவத்தன்று பெண்களின் உள்ளாடையை நோட்டமிட்டு எடுத்துச் சென்ற இளைஞரை குடியிருப்பு வாசிகள் மடக்கிப்பிடித்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, இளைஞர் 25 வயதுடைய பொறியியல் பட்டதாரி சரத் என்பது தெரியவந்தது. இவரது பெற்றோர் இருவரும் ஆசிரியர் ஆவார்கள், சகோதரர் பொறியாளர் ஆவார். சரத்தை கைது செய்த அதிகாரிகள், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். Tansihq Jewlery: தன்சிக் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் துணிகரம்.. பட்டப்பகலில் ரூ.25 கோடி நகைகள் கொள்ளை..! 

திருட்டு உள்ளாடையுடன் தனிமை உல்லாசம்:

சரத் குறித்து பெற்றோர் அறிந்த குற்றச்சாட்டுக்கு முதலில் அவர்கள் அதிர்ச்சியாகி இல்லை என மறுத்தாலும், பின் அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கம் அளித்தனர். சரத் மீது எந்த விதமான எழுத்துப்பூர்வ புகாரும் கிடைக்காத காரணத்தால், அவர் சொந்த ஜாமினில் அதிகாரிகளால் கண்டிப்புக்கு பின் விடுவிக்கப்பட்டார். மேலும், அவர் ஆபாச படத்துக்கு அடிமையாகி, பெண்களின் உள்ளாடையை திருடிச் சென்று தனிமையில் மகிழ்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சம்பவத்தன்று நீச்சல் பயிற்சிக்கு சென்று வந்தவர், வழியில் பார்த்த பெண்களின் உள்ளாடைக்கு ஆசைப்பட்டு, அதனை எடுக்க முற்பட்டபோது சிக்கிக்கொண்டது தெரியவந்தது.