
மார்ச் 10, சாம்பல் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பல் மாவட்டம், ஜூன்வாய் காவல் எல்லைக்குட்பட்ட, தப்தரா கிராமத்தில் வசித்து வருபவர் குல்பாம் சிங் யாதவ் (Gulfam Singh Yadav). இவர் பாஜக ப்ருகர் ஆவார். இன்று அவர் தனது வீட்டில் இருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கும்பல், குல்பாமின் உடலில் விஷ ஊசியை செலுத்திவிட்டு தப்பிச் சென்றது. இந்த சம்பவத்தில், குடும்பத்தினரால் மீட்கப்பட்ட குல்பாம் சிங், அலிகார்க் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குல்பாம் சிங் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், தனிப்படைகள் அமைத்து 3 பேர் கும்பலுக்கு வலைவீசி இருக்கின்றனர். அவர் எதற்காக? யாரால்? கொலை செய்யப்பட்டார்? என விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. Tansihq Jewlery: தன்சிக் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் துணிகரம்.. பட்டப்பகலில் ரூ.25 கோடி நகைகள் கொள்ளை..!
யார் இந்த குல்காம் சிங் யாதவ்?
பாஜக முக்கியப்புள்ளியாக வலம்வந்தவர் கொலை செய்யப்பட்ட காரணத்தால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையும் நிலவி வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாவட்ட நிர்வாகி பொறுப்பில் இருந்த குல்பாம் சிங் யாதவ், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் பொறுப்பிலும் இருந்துள்ளார். மேலும், கடந்த 2004ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், குன்னார் தொகுதியின் வேட்பாளராகவும் களமிறங்கி இருந்தார். இவர் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவ்-வை எதிர்த்து போட்டியிட்டனர் ஆவார். கடந்த 2016ம் ஆண்டில் பாஜகவின் மேற்கு மாநில பிராந்திய துணை தலைவராகவும் பொறுப்பு வகித்து இருக்கிறார். இவரின் மறைவு அம்மாநில அளவில் பரபரப்பு சூழலை உண்டாக்கி இருக்கிறது.