
மார்ச் 10, ஆரா (Bihar News): இந்தியாவில் கடந்த 31 ஆண்டுகளாக தங்கம், வைரம் உட்பட ஆபரணங்கள் விற்பனையில் கோலோச்சி செயல்பட்டு வரும் நிறுவனம் தன்சிக் (Tanishq). இந்நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 500 க்கும் அதிகமான நகரங்களில் விற்பனை மையம் இருக்கிறது. சிங்கப்பூர், அமெரிக்கா, அமீரகம், கத்தார் உட்பட பல நாடுகளில் கிளைகளும் இருக்கின்றன. தன்சிக் நிறுவனம் டாடாவின் குழுமம் ஆகும். இந்நிலையில், தன்சிக் நிறுவனத்தின் தங்கம், வெள்ளி, வைர ஆபரணங்கள் விற்பனை நிறுவனம், பீகார் மாநிலத்தில் உள்ள ஆரா (Arrah) மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இன்று காலை கடையின் ஊழியர்கள் வழக்கம்போல வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது, கையில் துப்பாக்கியுடன், திரைப்பட பாணியில் கொள்ளை கும்பல் நகைக்கடைக்குள் நுழைந்தது. துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டிய கும்பல், நகைக்கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்தது. Alcohol Tobacco Ads Banned in IPL: ஐபிஎல் போட்டிகளில் சிகரெட், மது உட்பட போதைப்பொருள் விளம்பரத்திற்கு தடை; மத்திய அரசு அதிரடி.!
ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை:
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், கொள்ளை கும்பலுக்கு வலைவீசினார். மறுபுறம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் விபரம் சேகரிக்கப்பட்டது. இதனிடையே, மொத்தமாக ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளை கும்பல் கொள்ளையடித்துச் சென்றது உறுதியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்த காவல்துறையினர், தீவிர விசாரணையை முன்னெடுத்தனர். இந்த விசாரணையில் குற்றவாளிகளாக விஷால் குப்தா, குணால் குமார் ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் இருவரும் அதிகாரிகளால் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் எஞ்சிய 6 பேருக்கும் வலைவீசப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில், வங்கிக்குள் நுழைந்து கொள்ளை நடப்பது போன்ற காட்சிகள் இருக்கும். அதனை மிஞ்சும் அளவு நிஜத்தில் துணிகர சம்பவம் நடந்துள்ளது. காவல்துறை வழக்கம்போல, சம்பவத்துக்கு பின்னர் தனது அதிரடியை காண்பித்து 2 பேரை பிடித்துள்ளது. எஞ்சியோருக்கு வலைவீசி இருக்கிறது.
கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள்:
बिहार के आरा में तनिष्क शोरूम में घुसे 6 बदमाशों ने करीब 25 करोड़ रुपए की ज्वैलरी लूटी। एनकाउंटर में दो बदमाशों विशाल गुप्ता और कुणाल कुमार को गोली लगी। हालांकि लूटी गई ज्यादातर ज्वैलरी बचे हुए 4 बदमाश लेकर भाग निकले हैं। pic.twitter.com/uVasowN00G
— Sachin Gupta (@SachinGuptaUP) March 10, 2025