Woman Climbed The Building Of Government Hospital: அரசு மருத்துவமனையில் பதற்றம்.. மொட்டை மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண்மணி..!
லக்கிம்பூரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை கட்டடத்தின் மொட்டை மாடியில் மீது பெண் ஒருவர் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 30, உத்தரப்பிரதேசம் (Uttar Pradesh): உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்கிம்பூர் அருகே அமைந்துள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் பெண்மணி ஒருவர் கோபம் அடைந்துள்ளார். அதன் காரணமாக மருத்துவமனையின் மொட்டை மாடிக்கு விறுவிறுவென சென்று அங்கிருந்து குதிப்பது போன்று நீண்ட நேரமாக நின்றுள்ளார். தற்போது அந்தப் பெண்மணியின் வீடியோவானது தான் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. Viral Video: கன்றுக்குட்டியை கடித்த சிறுத்தை.. வைரலாகும் வீடியோ.. சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி..!
மேலும் அந்தப் பெண்மணி நீண்ட நேரம் ஆக மொட்டை மாடியில் நின்றதனால் பதற்றம் அடைந்த மருத்துவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவ்விடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். அவர்கள் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி கட்டிடத்தில் இருந்து கீழே இறக்கினர். மேலும் அங்கிருந்த மருத்துவர்களிடம் அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டினை முன்னிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
लखीमपुर - सरकारी अस्पताल की बिल्डिंग पर चढ़ी महिला, बिल्डिंग पर चढ़कर महिला ने काटा हंगामा
➡अस्पताल में डॉक्टरों की अनदेखी से नाराज थी
➡अस्पताल के डॉक्टर पर लगाया अनदेखी का आरोप
➡पुलिस ने महिला को समझाकर बिल्डिंग से नीचे उतारा
➡ओयल में स्थित जिला सरकारी अस्पताल का मामला.… pic.twitter.com/i8DIOQrL0u
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) January 30, 2024
(The above story first appeared on LatestLY on Jan 30, 2024 02:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

