Viral Video: கன்றுக்குட்டியை கடித்த சிறுத்தை.. வைரலாகும் வீடியோ.. சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி..!

கன்றுக்குட்டியை கடித்த சிறுத்தையின் வீடியோவானது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது

Viral Video: கன்றுக்குட்டியை கடித்த சிறுத்தை.. வைரலாகும் வீடியோ.. சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி..!
Viral Video (Photo Credit: @backiya28 X)

ஜனவரி 30, திருநெல்வேலி (Tirunelveli): திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை அடுத்த அனவன்குடியிருப்பு பகுதிக்குள் நேற்று இரவு புகுந்த சிறுத்தை விவசாயி மாரியப்பன் என்பவரின் கன்றுக் குட்டியை கடித்து தாக்கியுள்ளது. தற்போது அந்த வீடியோவானது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. அதனால் குடியிருப்பு பகுதியில் உள்ள சிறுத்தையின் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 12 Lakh Jobs in India: லட்சக்கணக்கான புதிய நிறுவனங்கள் ஆரம்பம்.. இந்தியாவில் 12 லட்சம் பேருக்கு வேலை..!

சிறுத்தை பிடிபடும் வரை பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் தனியாக வெளியே நடமாட வேண்டாம் எனவும், குறிப்பாக குழந்தைகளை வெளியில் விளையாட விட வேண்டாம் என்றும் வீட்டிற்கு வெளியே படுத்து தூங்க வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என கூறி பொதுமக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும்படி னத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

(The above story first appeared on LatestLY on Jan 30, 2024 01:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).