Husband Kills Wife: மனைவியை கழுத்தறுத்து கொன்று, கணவர் தற்கொலை; குடும்பத்தகராறில் நடந்த பதறவைக்கும் சோகம்.!

தனது கணவரின் செயல்பாடுகளில் விருப்பம் இல்லாத மனைவி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். பரமத்தி வேலூரை பதறவைத்துள்ள சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Husband Kills Wife: மனைவியை கழுத்தறுத்து கொன்று, கணவர் தற்கொலை; குடும்பத்தகராறில் நடந்த பதறவைக்கும் சோகம்.!
Murder | Crime File Pic (Photo Credit: Pixabay / Pexels)

ஏப்ரல் 15, பரமத்தி வேலூர் (Namakkal Crime News): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் சாலை, கொங்கு நகரில் வசித்து வருபவர் மனோகரன் (வயது 54). இவர் பொறியாளர் ஆவார். மனோகரனின் மனைவி அனிதா (வயது 47). தம்பதிகளுக்கு ராகுல் என்ற 24 வயதுடைய மகன் இருக்கிறார். மனோகரன் ஓமன் நாட்டில் பணியாற்றி வருகிறார், கடந்த 11ம் தேதி விடுமுறை எடுத்து நாமக்கல் வந்துள்ளார்.

கணவரின் முடிவுக்கு மனைவி எதிர்ப்பு: சந்தைப்பேட்டை புதூர் பகுதியில் மனோகரனுக்கு சொந்தமான பழைய வீடு உள்ளது. இதனை புதுப்பிக்க மனோகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், தனது மகனை வெளிநாடு அனுப்பி வைக்கவும் முயற்சிகள் மேற்கொண்டதாக தெரியவருகிறது. இந்த விஷயத்தில் விருப்பம் இல்லாத அனிதா, கணவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். Chennai Shocker: காதல் விவகாரத்தில் பயங்கரம்; நெற்றிப்பொட்டில் துப்பாக்கி முனையில் நடந்த பரபரப்பு சம்பவம்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.! 

Suicide file pic (Photo Credit: Pixabay)

உண்டானது குடும்பத்தகராறு: இதனால் தம்பதிகளுக்கு இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினமும் இரவு நேரத்தில் தகராறு நடந்துள்ளது. இதனால் தம்பதியின் மகன் ராகுல், சந்தைப்பேட்டை புதூரில் இருக்கும் வீட்டிற்கு சென்று உறங்கியுள்ளார். பின் நேற்று காலை தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

தாய் கழுத்தறுத்து கொலை, தந்தை தற்கொலை: அங்கு தாய் அனிதா கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், மற்றொரு அறையில் மனோகரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவாறு சடலமாக இருந்துள்ளார். பதற்றத்தில் நிலைமையை உணர்ந்துகொண்ட ராகுல், நாமக்கல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். Car Caught Fire 7 Burnt Alive: லாரியின் பின்னால் மோதிய கார்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் கருகி துள்ளத்துடிக்க பலி., பதறவைக்கும் காட்சிகள்.! 

காவல்துறையினர் விசாரணை: தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் குடும்பச்சண்டையில் கணவர் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து, பின் தானும் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

(The above story first appeared on LatestLY on Apr 15, 2024 09:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).