மார்ச் 08, எட்டாக் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள எட்டாக் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதீர் (வயது 15). நேற்று சுதீரின் சகோதரருக்கு திருமணம் ஆகும். இதனால் குடும்பத்தினர் அனைவரும் உற்சாகமாக திருமண ஏற்பாடுகளை கவனித்து வந்துள்ளனர். திருமணம் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, அன்று இரவு டிஜெ இசைக்கச்சேரி ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதனையடுத்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உற்சாகமாக இசைக்கச்சேரியில் ஆட்டம்போட்டனர். Akira Toriyama Died: 90 கிட்ஸ்களே நினைவிருக்கா?... டிராகன் பால் கார்ட்டூன் உருவாக்கியவர் மரணம்..! விபரம் உள்ளே.!
மாரடைப்பால் சுருண்டு விழுந்து பலி: இந்நிலையில், திடீரென சுதீர் மயங்கி விழுந்தார். அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்த நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சமீபகாலமாகவே பல இந்திய மாநிலங்களில் இளம் வயதுடையோர் திடீர் மாரடைப்பு மரணத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. Ambulance Driver Stolen 25 Bikes: மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் மாயம்; 25 வாகனத்துடன் பிடிபட்ட 108 அவசர ஊர்தி ஊழியர்.!
பத்திரிகையாளர் மரணம்: அதேபோல, செவ்வாய்க்கிழமை அன்று உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியை சேர்ந்த ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் (Asian News International ANI) பணியாளர் ரவி குப்தா என்பவர், செய்தி சேகரிக்க சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரின் மரணம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. தற்போதைய நிலையில் மாரடைப்பு மரணங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், நாம் நமது உடல்நிலையை கவனித்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. துரித உணவுகள், நொறுக்குத்தீனிகளை தவிர்த்துவிட்டு, உடலுக்கு நன்மை தரும் காய்கறிகள், பழங்களை சாப்பிட்டு, உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை பாதுகாப்பதே இவ்வாறான விஷயங்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.
15 வயது சிறுவன் மரணத்தின் அதிர்ச்சி இறுதித்தருண காட்சிகள் இதோ:
दूल्हे का छोटा भाई सुधीर DJ पर नाच रहा था। अचानक गिरा और मौत हो गई। उम्र सिर्फ 15 साल थी।
📍एटा, उत्तर प्रदेश pic.twitter.com/rCpL4k7yi8
— Sachin Gupta (@SachinGuptaUP) March 7, 2024