மார்ச் 08, விழுப்புரம் (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சுற்றுவட்டார கிராமம் மற்றும் நகரங்களை சேர்ந்த நபர்களும் உள் மற்றும் புற நோயாளிகளாக அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். மருத்துவமனை வளாகத்தில், மருத்துவமனைக்கு வந்து செல்வோர் வசதிக்காக வாகன நிறுத்தமும் உள்ளது. இந்நிலையில், சமீபகாலமாகவே மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து மாயமாகி வந்தன.

இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு: இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, விக்கிரவாண்டி பகுதியிலும் நடந்த தொடர் வாகன திருட்டு சம்பவங்கள் குறித்து சரக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட விவகாரத்தில், அவசர ஊர்தி ஓட்டுநர் சுரேஷ் என்பவரின் மீது சந்தேகம் திரும்ப, அவர் விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டபோது பகீர் உண்மை அம்பலமானது. Akira Toriyama Died: 90 கிட்ஸ்களே நினைவிருக்கா?... டிராகன் பால் கார்ட்டூன் உருவாக்கியவர் மரணம்..! விபரம் உள்ளே.!

அவசர ஊர்தி ஓட்டுநர் கைது: அதாவது, முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 108 அவசர ஊர்தி ஓட்டுநராக வேலை பார்த்து வந்த சுரேஷ், கிட்டத்தட்ட 25 வாகனங்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து, களத்தில் இறங்கிய காவல் துறையினர், சுரேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் அவர் மறைத்து வைத்த மற்றும் கடத்தி விற்பனை செய்த வாகனங்களில் 25 வாகனங்களை முதற்கட்டமாக மீட்டு இருக்கின்றனர்.

அதிகாரிகள் கோரிக்கை: தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் இருசக்கர வாகனத்தை தவறிவிட்டோர், விக்கிரவாண்டி காவல் நிலையத்தை அணுகவும் அதிகாரிகள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.