Rape | Representative image (Photo Credit: ANI)

மே 17, லக்னோ (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, ஆஷியானா பகுதியில் வசித்து வரும் 40 வயது பெண்மணி, தனது கணவரின் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், கணவர் தன்னை வேறொரு நபர்களுடன் பாலியல் ரீதியான உறவு (Lucknow Wife Swapping Case) வைத்துக்கொள்ள வற்புறுத்தி அடித்து துன்புறுத்தி வருவதாகவும், தனது அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். Girl Attacked by Stranger: தனியே நடந்துகொண்டிருந்த பெண்ணின் மீது தாக்குதல்; இளைஞரின் அதிர்ச்சி செயல்.. பதறவைக்கும் காட்சிகள்.! 

மனைவியை மிரட்டும் கணவன்: பெண்மணி அளித்துள்ள புகாரில், "கடந்த 2008ம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணம் முடிந்த நாட்களில் இருந்து கணவர் என்னிடம் எப்போதும் கடுமையான முறையிலேயே நடந்துகொள்வார். எங்களுக்கு திருமணத்திற்கு பின் பெண் குழந்தை ஒன்றும் பிறந்த நிலையில், அதற்காகவும் என்னை துன்புறுத்தி வந்தார். தற்போது அவர் வரதட்சணை கேட்டு கடந்த சில மாதங்களாக தொல்லை செய்து வந்தார். இதனிடையே நான் ஒருநாள் உறங்கும்போது, என் அந்தரங்க பாகங்களை அரைகுறை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டுள்ளார். Vlogger Sexual Harassment Case: திருச்சூர் பூரம் திருவிழாவில் அமெரிக்க தம்பதிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது; காவல்துறை அதிரடி.! 

காவல் நிலையத்தில் பெண் புகார்: இதனை அவரின் நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஒருநாள் நள்ளிரவில் அவர் பெண் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தார். இதன் வாயிலாக அவர் எதோ திட்டமிடுகிறார் என எண்ணினேன். இறுதியில் அவரின் நண்பர்களுடன் மனைவியை மாற்றும் கும்பல் போல செயல்பட்டு, என்னை வேறொருருடன் உறவுகொள்ள வற்புறுத்துகிறார். அவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த புகாரை ஏற்றுக்கொண்டுள்ள அதிகாரிகள் தற்போது பெண்ணின் கணவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.