மே 17, கான்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் (Kanpur Crime News), திரிநேத்ரா அபியின் பகுதியில் சம்பவத்தன்று இளம்பெண் ஒருவர் மார்க்கெட்டுக்கு சென்று பின்னர் மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்துகொண்டு இருந்தார். அச்சமயம் பெண்ணை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், அவரை வாயை பொத்தி கீழே தள்ளி தாக்கி கடத்த முயற்சித்தார். பெண்மணி அலறி எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி உடனடியாக அங்கிருந்த சிசிடிவி கேமிரா ஆதாரத்துடன் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றவாளிக்கு வலைவீசப்பட்டுள்ளது. Vlogger Sexual Harassment Case: திருச்சூர் பூரம் திருவிழாவில் அமெரிக்க தம்பதிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது; காவல்துறை அதிரடி.!
Warning: Disturbing video
This is what happened to a woman while she was returning from market in Kanpur, UP. Local police claims she was pushed to the ground. An investigation is underway. pic.twitter.com/KG1WkBNhW8
— Piyush Rai (@Benarasiyaa) May 16, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)