Sex trafficking Gang: 14 வயது சிறுமியை பாலியல் அடிமையாக விற்பனை செய்ய முயற்சி; இருவர் கைது.. அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
பணத்திற்காக சிறுமிக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி மும்பை அழைத்து வரப்பட்ட சிறுமி இரண்டு பேர் கும்பலால் பாலியல் அடிமையாக விற்பனை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
பிப்ரவரி 18, தானே (MAHARASHTRA NEWS): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தானே, டெல்லி போன்ற இடங்களில் இளம் வயதுள்ள பெண்களை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுவதுவது, வறுமையில் வாடிவரும் சிறுமிகளை வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி பாலியல் அடிமையாக விற்பனை செய்வது போன்ற செயல்கள் தொடர்ந்து வருகின்றன. அவர்களை விலைகொடுத்து வாங்கி ஈவு இரக்கமின்றி சீரழிக்க காத்திருக்கும் கும்பலால் இவ்வாறான சோகங்கள் நடக்கின்றன. Cop Killed Man: காவலர் மனைவியுடன் கள்ளக்காதல்., அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் சுட்டுக்கொலை.. அதிரவைக்கும் பின்னணி இதோ.!
14 வயது சிறுமி மீட்பு: இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே பகுதியில் வந்தேசத்தை சேர்ந்த பெண்களை அழைத்து வந்து, அவர்களை பாலியல் அடிமையாக விற்பனை செய்யும் முயற்சிகள் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. உடனடியாக அங்குள்ள பல்வேறு இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நவி மும்பையில் உள்ள தலோஜா பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமி பாலியல் அடிமையாக விற்பனை செய்யப்பட முயற்சிக்கப்பட்டபோது மீட்கப்பட்டார். GSLV F14 INSAT 3DS Mission: விண்ணில் சீறிபாய்ந்தது இஸ்ரோவின் அதிநவீன வானிலை செயற்கைகோள்; அட்டகாசமான காட்சிகள் இதோ.!
பாலியல் அடிமையாக விற்பனை: அங்கு சிறுமியை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடந்த முதற்கட்ட விசாரணையில், ஹைடெக் முறையில் பாலியல் அடிமையாக சிறுமியை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சமன் ஷைக் மற்றும் மஹினூர் மண்டல் ஆகிய இருவர் வங்கதேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை வேலை வாங்கித்தருவதாக அழைத்து வந்து பாலியல் அடிமையாக விற்பனை செய்ய முயன்றதும் உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
(The above story first appeared on LatestLY on Feb 18, 2024 06:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

