TNPSC Exam Update: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்; இறுதிவாய்ப்பை தவறவிடாதீங்க.!

2,327 காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்ட நிலையில், விண்ணப்பித்தலுக்கான காலக்கெடு நாளையுடன் நிறைவு பெறுகிறது.

TNPSC Office (Photo Credit: @Thondainadu X)

ஜூலை 18, சென்னை (Chennai News): தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamilnadu Public Service Commission) சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் வாயிலாக, அரசுப்பணியிடங்களில் இருக்கும் காலியிடங்கள் நிரப்படுகின்றன. அந்த வகையில், தொகுதி 2 (Group 2) முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வாளர் பணியாளையும் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. செப்டம்பர் 19 ஆம் தேதி வரை தேர்வர்கள் குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி (TNPSC) சார்பில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. Supreme Court Judges: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆர். மகாதேவன், கோடீஸ்வர் சிங் பதவியேற்பு..! 

நாளை கடைசி நாள்:

இந்நிலையில், குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19 நள்ளிரவு 11:59 மணி வரையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குரூப் 2 பதவிகளில் காலியாக உள்ள 2,327 காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. குரூப் 2 நிலையில் உள்ள 507 காலியிடங்களை நிரப்பவும், குரூப் 2ஏ நிலையில் 1820 காலி இடங்களை நிரப்பவும் இந்த தேர்வுகள் நடைபெறுகின்றன. கடந்த ஜூன் 20ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், நாளை நள்ளிரவுடன் இதற்கான காலக்கெடுவானது நிறைவு பெறுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement