நவம்பர் 04, சென்னை (Chennai News): தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் கல்வித்துறை அதிகாரிகளுடன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். மேலும், தேர்வு எழுதும் மாணவர்கள் அச்ச உணர்வின்றி தேர்வு எழுத வேண்டும். காலாண்டு, அரையாண்டு போல மாதத்தேர்வு தான் இது. ஒவ்வொரு தேர்வுக்கும் 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை விடுமுறை இருக்கிறது என்பதால், மாணவர்கள் உறுதியுடன் தேர்வுக்கு தயாராக வேண்டும். நல்ல உறக்கத்துடன் படிக்கும் அவசியம் என அமைச்சர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து தேர்வு தொடர்பான அறிவிப்பும் வெளியாகின. Gold Rate Today: தங்கம் விலை இன்று ரூ.800 குறைவு.. வெள்ளி விலை வீழ்ச்சி.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அறிவிப்பு (10, 11, 12th Exam Dates):
அதன்படி, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 02, 2026 முதல் தொடங்கி மார்ச் 26, 2026ல் நிறைவு பெறுகிறது. இதற்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி மாதம் 09 முதல் தொடங்கி 16 வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் 08.05.2026ல் வெளியிடப்படும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11, 2026ல் தொடங்கி ஏப்ரல் 06, 20265ல் நிறைவு பெறுகிறது. செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி பிப்ரவரி 28ல் நிறைவு பெறுகிறது. 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 20.05.2026ல் வெளியிடப்படும். 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடப்பு ஆண்டு முதல் கிடையாது என்பதால், அரியர் வைத்த மாணவர்களுக்கான மறுதேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மார்ச் 03ம் தேதி தொடங்கி மார்ச் 27ம் தேதி வரை நடைபெறும். செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 16 தேதி முதல் பிப் 21 வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் 20.05.2026ல் வெளியிடப்படும். 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.07 இலட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.70 இலட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வு காலை 10 மணிமுதல் தொடங்கி நண்பகல் 01:15 வரை நடைபெறுகிறது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை (+2 Exam Date 2025):
02.03.2026 - திங்கள் - தமிழ்
05.03.2026 - வியாழன் - ஆங்கிலம்
09.03.2026 - திங்கள் - கணக்கியல்
13.03.2026 - வெள்ளி - இயற்பியல்
17.03.2026 - செவ்வாய் - விலங்கியல்
23.03.2026 - திங்கள் - வரலாறு
26.03.2026 - வியாழன் - கணினி அறிவியல்
SSLC தேர்வு அட்டவணை (SSLC Exam Date 2025):
11.03.2026 - புதன் - தமிழ்
16.03.2026 - திங்கள் - ஆங்கிலம்
25.03.2026 - புதன் - கணிதம்
30.03.2026 - திங்கள் - அறிவியல்
02.04.2026 - வியாழன் - சமூக அறிவியல்
06.04.2026 - திங்கள் - விருப்பப்பாடம்
பொதுத்தேர்வு அட்டவணை விபரம் (Tamilnadu Public Exam Time Table):
அன்பு மாணவர்களே...
மகிழ்ச்சியாக தேர்வுக்கு தயார் ஆகுங்கள்!
இது உங்களுக்கு மட்டுமல்ல எனக்குமான ஆசிரியர்களுக்குமான தேர்வும்தான்! #TNPublicExamdates#12thExam#10thExam @tnschoolsedu pic.twitter.com/xmb37sEXaS
— Anbil Mahesh (@Anbil_Mahesh) November 4, 2025