Gold Silver Price: தங்கம் விலை இன்று குறைவு.. விவரம் உள்ளே.!

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இன்றைய தங்கம் விலை மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழை பின்தொடரவும்.

Gold Silver Price: தங்கம் விலை இன்று குறைவு.. விவரம் உள்ளே.!
Gold SIlver Price (Photo Credit: @mrbarnicoat X)

மே 26, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனையால் இந்திய முதலீட்டு சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் சென்னையில் ரூ.74,000 கடந்தும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. உலகளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு காரணமாக, சவரன் தங்கத்தின் விலை சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவருகின்றன. வானிலை: தொடக்கமே அமர்க்களம்.. கொட்டித்தீர்க்கும் மழை.. இன்று மிகப்பெரிய அலர்ட்.!

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

இந்நிலையில், மே 26ஆம் தேதியான இன்று திங்கட்கிழமை, தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்று (மே 26) 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, கிராம் தங்கம் ரூ.8,950க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.71,920 க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on May 26, 2025 10:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).