Gold Silver Price: தங்கம் விலை இன்று கடும் உச்சம்.. ஒரேநாளில் சவரன் ரூ.1,760 உயர்வு.!
நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இன்று தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் விலை குறித்த தகவலை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
மே 21, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனையால் இந்திய முதலீட்டு சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் சென்னையில் ரூ.74,000 கடந்தும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. உலகளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு காரணமாக, சவரன் தங்கத்தின் விலை சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவருகின்றன. 3 Year Old Baby Killed: 3 வயது பச்சிளம் பிஞ்சு ஆற்றில் வீசி கொலை.. தாயின் பதறவைக்கும் செயல்.!
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
இந்நிலையில், மே 21ஆம் தேதியான இன்று புதன்கிழமை, தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று (மே 21) 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.8,930க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளி ரூ.3000 உயர்ந்து, வெள்ளியின் விலை ரூ.1,11,000க்கு விற்கப்படுகிறது. தேசிய பங்குசந்தையும் இன்று உயர்வுடன் இருக்கிறது.
(The above story first appeared on LatestLY on May 21, 2025 10:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

