
மே 20, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம், கோலஞ்சேரி வரிகோலி மட்டக்குழி பகுதியில் வசித்து வருபவர் சுபாஷ். இவரின் மனைவி சந்தியா. தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், மூன்று வயதுடைய கல்யாணி என்ற மகள் இருக்கிறார். குழந்தை கல்யாணி மட்டக்குழி பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்துக்கு தினமும் சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
குழந்தை மாயமானதாக நாடகமாடிய தாய் :
சம்பவத்தன்று மகளை அங்கன்வாடிக்கு அழைத்து சென்ற தாய் பின் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர சென்றுள்ளார். வீட்டுக்கு அழைத்து வரும்போது மகள் மாயமாகிவிட்டதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக தகவலறிந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். மேலும் தங்களுக்கு தெரிந்த இடங்களிலும் தேடி அலைந்துள்ளனர். சிறுமி மாயமானது தொடர்பான தகவல் மாநிலம் முழுவதும் தெரிவிக்கப்பட்டு தேடுதல் வேட்டையும் தீவிரபடுத்தப்பட்டது. Trending Video: காதலியை பைக் டேங்கில் அமர வைத்து லாங் ட்ரைவ்.. ஆதாரத்துடன் சிக்கிய வீடியோ.!!
போலீஸ் விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் :
இந்நிலையில் சிறுமியின் தாயிடம் காவல்துறையினர் நடந்தது குறித்து கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார். அதனால் அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போது சிறுமியை சாலக்குடி ஆற்றுக்கு அருகே அழைத்துச் சென்று விட்டு வந்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் சிறுமி ஆற்றுக்குள் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து ஆற்றில் தேட முடிவெடுத்துள்ளனர்.
ஆற்றில் குழந்தையை வீசிய தாய் :
நீச்சல் பயிற்சி வீரர்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 8 மணி நேர தேடலுக்கு பின் ஆற்றில் இருந்து சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். விசாரணையில் தாயே மகளை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய மேற்படி விசாரணையில், கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தற்போது மகளுடன் இருக்கும் சந்தியா இந்த விபரீத செயலை அரங்கேற்றியது தெரியவந்தது. சிறுமியை எதற்காக கொலை செய்தார்? என்பது விசாரணை முடிந்தபிறகே தெரியவரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.