Girl Gang Raped: இளம்பெண் காரில் கடத்தப்பட்டு கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நால்வர் கும்பலால் அரங்கேறிய கொடூரம்..!
சாலையில் தனியே நடந்து வந்துகொண்டு இருந்த இளம்பெண், நால்வர் கும்பலால் காரில் கடத்தி செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.
டிசம்பர் 25, பாராபங்கி (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாரபாங்கி (Barabanki) மாவட்டத்தைச் சார்ந்த இளம் பெண், நேற்று தனது மாமா வீட்டிற்கு சென்று வீட்டிற்கு வந்து கொண்டு இருந்துள்ளார். அப்போது, அப்பகுதியை சார்ந்த முகல் ஆசாம் என்ற ரியாஸ், அஷ்ரப், சபு, இஸ்லாமுதீன் ஆகியோர் பெண்ணை வழிமறித்து இருக்கின்றனர்.
கயவர்களிடம் சிக்கிய இளம்பெண்: மேலும், அவரை பெண்ணின் ஊரில் கொண்டு சென்று இறக்கிவிட்டு செல்வதாக கூறியுள்ளனர். பெண்மணி கயவர்களின் பேச்சை கண்டுகொள்ளாமல் சென்ற நிலையில், நால்வர் கும்பல் வற்புறுத்தி (Girl Gang Raped) பெண்ணை தங்களது காருக்குள் ஏற்றிச்சென்றுள்ளது. அவர் கத்தாமல் இருக்க வாயை பொத்தி கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது. Ennore Ammonia Leak: சென்னை மக்களை பதறவைத்த சம்பவம்; திடீரென அமோனியா வாயு கசிந்தால் அதிர்ச்சி.. 30 பேருக்கு உடல்நலக்குறைவு.!
கை-கால்களை கட்டிப்போட்டு நடந்த கொடுமை: பெண்ணை அங்குள்ள தேவா என்ற பகுதியில், தனிமையான இடத்திற்கு கொண்டு சென்ற கும்பல், கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி தனது அண்ணிக்கு தொடர்பு கொண்டு தனக்கு நடந்த கொடுமையை கண்ணீருடன் விவரித்துள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்: தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வரை குடும்பத்தினர் பெண்ணை பத்திரமாக மீட்டனர். மேலும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நால்வர் கும்பலில் ஒரு குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
ஒருவர் கைது: அவரிடம் நடந்த விசாரணையின் பேரில் எஞ்சிய மூவருக்கு வலைவீசப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக கூட்டுப் பாலியல் பலாத்காரம், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை உட்பட பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)