Chennai Ennore Gas Leak (Photo Credit: @ANI X)

டிசம்பர் 27, எண்ணூர் (Chennai News): சென்னையில் உள்ள எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து, கடல் வழியே அம்மோனியாவை கப்பலுக்கு எடுத்துச் செல்லும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.

திடீரென மயங்கி விழுந்த மக்கள்: இதனையடுத்து, அப்பகுதி மக்கள் அமோனியா வாயு தாக்கி பாதிக்கப்பட்ட நிலையில், பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் அவசர உதவிக்குழுவினர், நிகழ்விடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். SBI Increases Interest Rates on Fixed Deposits: ஸ்டேட் பேங்க் வங்கி பயனாளர்களுக்கு உற்சாக செய்தி; நிரந்தர வைப்புத் தொகை வட்டி விகிதங்கள் உயர்வு.! 

உறுதி செய்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்: அங்குள்ள பிற பகுதிகளிலும் அதிகாரிகள் முகாமிட்டு, மக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனரா? என தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அமோனியா கசிவை உதவி செய்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தற்போது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதறிப்போன மக்கள்: அமோனியாவை எடுத்துச் செல்லும் குழாயின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கியாஸ் குழாய் விரிசல் ஏற்பட்ட பகுதியை கண்டறிந்து, அதனை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அம்மோனியா வாயு கசிவு காரணமாக பதற்றமடைந்த மக்கள், தங்களின் வீடுகளில் இருந்து வெளியேறி நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல தொடங்கினர்.

வீட்டிற்கு திரும்ப அறிவுறுத்தல்: தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகவும், அனைவரும் வீட்டிற்கு திரும்பலாம் என்றும் ஆவடி மாநகர காவல் ஆணையர் விஜயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். லேசாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிகழ்விடத்திலேயே மருத்துவ குழுவினர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.