Extremely Rare Conjoined Twins Born: இந்தோனேசியாவில் நடந்த அரிய சம்பவம்.. 4 கைகள், 3 கால்களுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்..!

ரியல் மாற்றான் இரட்டையர்கள் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

Extremely Rare Conjoined Twins Born (Photo Credit: @NDTV X)

மே 16, இந்தோனேசியா (Viral News): இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் மாற்றான். இந்த படத்தில் சூர்யா அவர்கள் மாற்றான். இரட்டையராக நடித்துள்ளார். இந்த படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் ரியல் மாற்றான் இரட்டையர்கள் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். 2018 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் பிறந்த குழந்தை தான் அந்த இரட்டையர்கள்.

நான்கு கைகள், மூன்று கால்களுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் (Conjoined Twins Born). இவர்கள் பிறந்ததை அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் என யாராலும் நம்ப முடியவில்லை. பலரும் வியந்து போனார்கள். இரண்டு தலைகள், நான்கு கைகள், ஒரு சிறுநீரகம், இரண்டு இதயம், ஒரு ஆண்குறி கொண்டு அந்த இரட்டையர்கள் பிறந்தார்கள். இந்த நிகழ்வு அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கேஸ் ரிப்போர்ட்ஸில் மட்டுமே பதிவாகியுள்ளது. Weather Report: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

குழந்தைகளின் அடி மார்பும் வயிறும் ஒட்டியிருந்தன. இருவரும் கல்லீரல், குடல் போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டனர். முதல் மூன்று ஆண்டுகள் இந்த இரட்டையர்கள் பல சவால்களை எதிர்கொண்டனர் அவர்களால் சுயமாக எழுந்து உட்கார முடியவில்லை. ஆனால், அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவின் உதவியால், அவர்கள் உட்கார ஆரம்பித்தனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement