ஜூன் 11, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள நீலாங்கரை பகுதியில் வசித்து வருபவர் அருண். இவரது மனைவி பாரதி. அருண் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இரட்டை குழந்தை பிறந்துள்ளன. இதனிடையே தனது இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போனதாக பாரதி காவல்நிலையத்தில் புகாரளித்தார். வானிலை: இரவு 7 மணிவரை 23 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை.. விபரம் உள்ளே.!
குழந்தையை மாடியில் இருந்து வீசிய தாய் :
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாயமான சிறுமி குறித்து பல கோணங்களில் விசாரித்தும் முன்னேற்றம் இல்லாததால் பாரதியிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்தது. அப்போது குழந்தைகளை கவனிக்க இயலாத காரணத்தால் அதிக மன உளைச்சல் ஏற்பட்டு இரட்டை குழந்தையில் ஒரு குழந்தையை மாடியில் இருந்து கீழே வீசி கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.