ஜனவரி 23, வாஷிங்க்டன் டிசி (World News): அமெரிக்க புகைப்பட கலைஞரான பெத் மூன் (Beth Moon), தனது வாழ்நாளில் 14 வருடங்களை, உலகின் மிகப்பழமையான மரங்களை படம் எடுப்பதற்காகவே செலவளித்துள்ளார். இவரின் பிளாட்டினம் ப்ரிண்ட் புகைப்படங்கள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று, அமேரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர், இத்தாலி போன்ற நாடுகளில் புகைப்பட கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இவர் எடுத்த 60 புகைப்படங்களை ‘Ancient Trees: Portraits Of Time’ என்னும் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இவரின் படைப்புகளில் சிலவற்றை இங்கு கணாலாம்.

THE LOVERS

இப்புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘காதலர்கள்’ என கேப்ஷனில் அழைத்துள்ளார். இது அப்பிரிக்க நாட்டில் மடகாஸ்கர் பகுதியில் உள்ள மரங்கள். Donald Trump: அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமை ரத்து.. இந்தியர்களின் நிலை என்ன? அதிபர் ட்ரம்பின் புதிய அறிவிப்பு..!

HEART OF THE DRAGON

இவரின் மரங்களின் புகைப்படங்களில் மிக முக்கியமானதாக போற்றப்படுகிறது இப்படம். ‘டிராகன் பிளட்’ என அழைக்கப்படும் இம்மரம் அரேபியாவில் உள்ள ஒரு சிறு தீவில் உள்ளன. குடைபோன்ற வடிவத்தைக் கொண்டது.

மெஜெஸ்டி

மடகாஸ்கரில் உள்ள இம்மரம் 100 அடி வரை வளர்க்கூடியது. 400 ஆண்டுக்கு மேல் பழமையானது.

அவென்யூ ஆஃப் தி போபாப்ஸ் (Avenue of the baobabs)

100 அடிவரை வளரக்கூடிய இம்மரங்கள் மடகாஸ்கரில் உள்ள தீவில் மட்டுமே வளரும் மரங்களாகும். கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக உள்ளது. தற்போது இருக்கும் 20 மரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கபோக் மரம்

பொதுவாக மழைக்காடுகளில் இருக்கும் இம்மரம் புளோரிடாவில் தனியார் தோட்டத்தில் இருந்து எடுக்கப்படுள்ளது. வேர்கள் மட்டுமே 12 அடிக்கு மேல் உள்ளது.

The Ifaty Teapot

மடகாஸ்கரில் டோலியாராவில் குறைவான் பாதுகாப்பில் வளர்கிறது இம்மரம். உள்ளூர்வாசிகளால் இம்மரம் டீபாட் என செல்லமாக அழைக்கப்படுகிறது. இதில் 31,000 கலன்களின் சேமிக்கும் நீரை இதில் சேமிக்கலாம். Google Doodle: வானில் தோன்றும் அரை நிலா.. கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்..!

Ankor Passage

கம்போடியாவில் சியம்ரீப் மாகணத்தில் பாதி சிதைந்த நிலையில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புத்த கோவிலில், கட்டடத்தில் மூழ்கடிப்பது போன்று இருக்கிறது.

பாட்டில் மரங்கல்

சொகோட்ரா பகுதியில் ரோஜா பாலைவனத்தின் நடுவில் அமைந்துள்ளது இப்பாட்டில் மரம். இம்மரத்தின் வேர்கள் தரையில் காணப்படாமல் நேரடியாகவே தண்டுகள் இருக்கின்றன. இது பார்பதற்கு பெரிய கிழங்கில் பூக்கள் இருப்பது போன்று காணப்படும்.

BristleCone Pine Relic

கலிஃபோனியாவில் பனிபிரதேசத்தில் பிரிஸ்டில்கோன் பைன் காடில் இது உள்ளது. இம்மரம் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்கிறதாக கூறப்படுகிறது. வெண்மை நிறமான இம்மரம் புயலில் காற்று சுழல்வதைப் போன்று அமைந்திருக்கிறது.

The Great Western Red Cedar

60 அடி உயரம் வரளக்கூடிய இம்மரம், கர்மர்தின்ஷிரைன் பகுதியில் வளர்ந்திருக்கிறது. இது 1863 காலகட்டத்தை சேர்ந்ததாக கூறப்படுகிறது. இம்மரம் பார்க்க மிக பிரமாண்டாமாக இருக்கிறது.

அமெரிக்க புகைப்பட கலைஞர் பெத் மூன் புகைப்படங்கள்:

 

View this post on Instagram

 

A post shared by Beth Moon (@bethmoonphotography)

 

View this post on Instagram

 

A post shared by Beth Moon (@bethmoonphotography)