Perambalur Twin Children Death Case (Photo Credit : Youtube / dinamalarweb X)

ஜூலை 12, பெரம்பலூர் (Perambalur News): பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாலிகண்டபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி தனலட்சுமி. தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 8 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த 11 மாதங்களுக்கு முன்னதாக இரட்டை குழந்தைகளும் பிறந்துள்ளன. இந்த நிலையில் திடீரென காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் குழந்தைகள் அவதிப்பட்டுள்ளனர். கந்தசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தனது பாட்டியுடன் சென்று நாட்டு மருந்து விற்பனை செய்பவரை தனலட்சுமி அணுகியுள்ளார். இரட்டை பெண் குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நாட்டு மருந்து வாங்கி கொடுத்த நிலையில், குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர்: குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி.. பெற்றோருக்கு தெரியாமல் குளிக்க சென்று சோகம்.!

குழந்தைகள் மர்ம மரணம் :

நேற்று ரேஷ்மா என்ற குழந்தை உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தையான தனுஸ்ரீயை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி இரண்டாவது குழந்தையும் உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தைகள் நாட்டு மருந்து கொடுத்ததால் உயிரிழந்தனவா? அல்லது இரட்டை பெண் குழந்தைகள் என்பதால் பெற்றோர்களே கொலை செய்துள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.