டிசம்பர் 30, சென்னை (Technology News): நம்மில் பலருக்கு தெரியும் சூரியனை நிலா மறைத்தால் சூரியகிரகணம், பூமி சூரியனை நிலவிடமிருந்து மறைத்தால் அது சந்திரகிரகணம் என்று தெரியும். பூமி சந்திரனை விட பெரிய அளவுடையது சூரியனை மறைக்க முடியும் ஆனால் சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியது எப்படி சூரியனை மறைக்கிறது தெரியுமா? என்னதான் நிலா 400 மடங்கு சூரியனை விட சிறியதாக இருந்தாலும், சூரியன் நிலாவை விட நம்மிடமிருந்து 400 மடங்கு தொலைவில் இருக்கிறது. அதனால் தான் சூரியனும் நிலாவும் ஒரே அளவாகத் தெரிகிறது. Digi Yatra: இனி விமான நிலையத்தில் லைன்ல நிற்க வேணாம்.. டிஜியாத்ரா செயலி மூலமா ஈஸியா போகலாம்.!
பிளாக் மூன்:
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 30) மாலை 5:27 மணியளவில் பகுதி கிரகணம் ஏற்படவுள்ளது. தற்போது ஏற்பட உள்ள பகுதி சூரியகிரகணத்தை வானியலாளர்கள் ப்ளாக் மூன்' (Black Moon) என அழைக்கின்றனர். சந்திரனின் கருநிழல் பூமியில் விழும் பகுதியிலிருந்து பார்த்தால் சூரியன் முழுவதும் மறைக்கப்பட்டு இருக்கும். இது முழுமையான கதிரவ மறைப்பாகும். எதிர்நிழலில் பகுதியிலிருந்து பார்த்தால் சூரியனின் ஒரு பகுதி மட்டும் நிலாவால் மறைக்கப்படுவதைப் பார்க்கலாம். இதற்கு பகுதி கிரகணம் என்று பெயர். ஒரு மாதத்தில் அமாவாசையே இல்லாத போது, ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வரும் போது, ஒரே வானியல் பருவத்தில் நான்கு அமாவாசைகளில் வரக்கூடிய மூன்றாவது அமாவாசை கருப்பு நிலா எனும் பிளாக் மூன் என வரையறைகள் கூறப்படுகின்றன.