Young Woman With Four Marriages: நான்கு திருமணம் செய்த இளம்பெண்... மூன்றாவது கணவர் போலீஸில் புகார்!

கர்நாடகாவில் ஏற்கெனவே இரண்டு திருமணம் நடந்ததை மறைத்து தன்னை மூன்றாவதாக திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண், தற்போது நான்காவது திருமணம் செய்துள்ளதாக இளைஞர் ஒருவர் போலீஸில் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

Marriage (Photo Credit: Pixabay)

டிசம்பர் 27, பெங்களூர் (Bengaluru): கர்நாடகா மாநிலம், தாவண்கெரேவைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த 2022-ம் ஆண்டு மண்டியா மாவட்டத்தில் உள்ள நரஹள்ளியைச் சேர்ந்த நிர்மலா என்ற சினேகா என்பவரை திருமணம் செய்துள்ளார்.இந்த நிலையில், மூன்று மாதங்களுக்குத் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி தனது பெற்றோர் வீட்டிற்கு சினேகா சென்றுள்ளார். இதன் பின் அவர் காணாமல் போனார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரகு என்பவரை தனது மனைவி சினேகா திருமணம் செய்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சினேகா ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக, வீடியோக்களைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Garlic Prices Hit New High: உச்சம் தொடும் பூண்டு விலை... இனி பூண்டு இல்லாமல் தான் சமையல் செய்யணும் போல..!

இதனைத் தொடர்ந்து மூன்றாவது கணவர் கூறியுள்ளதாவது, "எனக்கு முன் இரண்டு ஆண்களை மணந்ததால் என் மனைவிக்கு நான் மூன்றாவது கணவன். தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். நான் அவளை திருமணம் செய்யும் போது அவள் குடும்பத்தில் இருந்து யாரும் என்னிடம் அவள் முந்தைய திருமணங்களைப் பற்றி கூறவில்லை. எதிர்காலத்தில் மற்ற ஆண்களை ஏமாற்றாமல் இருக்க சினேகா மீது மோசடி புகார் கூறியுள்ளேன் ”என்றார். தற்போது மூன்றாவது கணவர் பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement