நவம்பர் 02, அமெரிக்கா (World News): அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமாவில் (Oklahoma) வசித்து வரும் நபர் தனது மனைவியை பெல்டால் அடித்து கொடுமைப்படுத்தி மூன்று குழந்தைகள் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, மனைவி உயிரிழந்த தடயத்தை அழிக்க அவரது ரத்தத்தை குழந்தைகளை சுத்தம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஸ்பென்சர் பகுதியில் வசித்து வரும் நபர் ஜோசுவா பிரவுன் (வயது 38). இவர் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியான ஷான்டே பிரவுனை பெல்ட் மற்றும் ஷூ கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார். பின் கம்பத்தில் கட்டி வைத்து கை துப்பாக்கியை பயன்படுத்தி கொடூரமாக தாக்கியது மட்டுமல்லாது தனது 7,14,15 வயதுடைய குழந்தைகள் முன்பு மனைவியை கொடூரமாக சுட்டு கொலை செய்துள்ளார். Indian-Origin Man Shot Dead: இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டுக்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
உயிர் போகும் வரை தாக்கிய கணவன்:
இதனால் பதறிய குழந்தைகளை அமைதியாக இருக்க கட்டாயப்படுத்தி, உயிரிழந்த தாயின் ரத்தத்தை சுத்தப்படுத்துமாறும் மிரட்டி இருக்கிறார். இந்த சம்பவம் கடந்த 2020 ஆம் ஆண்டு அப்பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. செப்டம்பர் 30,2020ல் இந்த சம்பவம் நடந்த நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று குற்றவாளியை கைது செய்தனர். அதனை தொடர்ந்து இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது குற்றவாளிக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் குழந்தைகளே எதிர்சாட்சியாக இருந்ததால் அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்து பரோல் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளும் தங்களது தந்தை விடுதலையாவதை விரும்பவில்லை என்றும் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்.