Kantara Star Rishabh Blessed: காந்தாரா நாயகனை ஆசிர்வதித்த அசல் தெய்வம்.. படத்தயாரிப்பு குழு வெளியிட்ட பிரத்தியேக வீடியோ..!

பஞ்சுருளி தெய்வம் நடிகர் ரிஷப் ஷெட்டியின் கைகளை பிடித்து அன்போடு அரவணைத்து ஆசி வழங்கிய வீடியோ படக்குழுவால் பகிரப்பட்டுள்ளது.

Kantara Star Blessed by Panjuruli (Photo Credit: Hombale Flims YouTube Video)

ஜனவரி 20: கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியான காந்தாரா (Kantara) திரைப்படம் வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது. ரிஷப் ஷெட்டியின் (Rishabh Shetty) எழுத்து மற்றும் இயக்கத்தில் ரூ.16 கோடி செலவில் உருவாகிய காந்தரா திரைப்படம், ரூ.450 கோடி வரை வசூல் செய்தது. இப்படத்தில் கர்நாடக - கேரள மாநிலத்தில் இருக்கும் பஞ்சுருளி தெய்வம் (Panjurli Daiva) தொடர்பான விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் வெளியான சாமி படமான கந்தரா, அகில இந்திய அளவில் மெகாஹிட் அடித்தது. இந்த நிலையில், காந்தாரா திரைப்பட நாயகனை பஞ்சுருளி தெய்வம் ஆசிர்வதிக்கும் வீடியோ படக்குழுவான ஹோம்பலே பிலிம்ஸ் (Hombale Flims) நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. Women Died Contraceptive Copper T: காப்பர் டி கருத்தடை சாதனத்தை நீக்க அறுவை சிகிச்சை; பெண் பரிதாப மரணம்.. உறவினர்கள் கண்ணீர் குமுறல்.!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement