Bike Car Accident: விதியை மறந்து அலட்சியமாக சென்றதால் நொடியில் நடந்த விபத்து; வாகன ஓட்டிகளே கவனம்.!
காரில் வந்தவர் நொடிப்பொழுது காத்திருந்தாலோ, இருசக்கர வாகனத்தில் வந்தவர் சாலையை கடக்கும் இடத்தில் மெதுவாக செல்ல வேண்டும் என்ற விதியை கடைபிடித்து இருந்தாலோ எந்த விபத்தும் நேர்ந்திருக்காது.
அக்டோபர் 13, மும்பை (Socially): சாலை பயணங்களில் விபத்துகள் என்பவை தவிர்க்க முடியாதவை, எப்போதும் நேர வாய்ப்புள்ளவை. ஆனால், இவை அனைத்தும் விதிகளை நொடியில் மீறுவதால் அதிகளவு நடைபெறுகிறது என்பதே நிதர்சனம். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் பொறுமையின்மையால் நடந்த விபத்தின் காணொளி வெளியாகியுள்ளது. காரில் வந்தவர் நொடிப்பொழுது காத்திருந்தாலோ, இருசக்கர வாகனத்தில் வந்தவர் சாலையை கடக்கும் இடத்தில் மெதுவாக செல்ல வேண்டும் என்ற விதியை கடைபிடித்து இருந்தாலோ இருவரும் வீட்டிற்கு சென்று இருக்கலாம். இப்பொது ஒருவர் மருத்துவமனையிலும், மற்றொருவர் வழக்கு விவகாரத்திலும் சிக்கி தங்களின் நேரத்தை இழக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது ஒவ்வொருவருக்கும் பாடம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு மும்பையில் உள்ள நன்தேட் (Nanded) பகுதியில் நடந்தது. Israel Palestine War: காசா நகருக்குள் களமிறங்க பாலஸ்தீனிய எல்லையில் குவிக்கப்படும் இஸ்ரேல் இராணுவம்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)