Israel Army Spot on Palestine Border Near Gaza Strip (Photo Credit: @ANI, Reuters Twitter)

அக்டோபர் 13, காசா (World News): கடந்த அக். 07ம் தேதி இஸ்ரேல் (Israel) நாட்டுக்கு எதிராக பாலஸ்தீனிய (Palestine) நாட்டில் செயல்பட்டு வந்த ஹமாஸ் (Hamas Terror Group) பயங்கரவாதிகள் போர் அறிவிப்பை வெளியிட்டு பல்முனை தாக்குதலை முன்னெடுத்தனர்.

இஸ்ரேல் - பாலஸ்தீனிய (Israel Palestine Border) எல்லை தடுப்புகள் தகர்க்கப்பட்டு, பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து கொடூர தாக்குதல்களை முன்னெடுத்தனர். ஈரான் மறைமுகமாக கொடுத்த ஏவுகணைகளை கொண்டு வான்வழி தாக்குதலும் நடைபெற்றன.

இதனையடுத்து, இஸ்ரேல் படைகள் களமிறக்கப்பட்டு, பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. சில ஏவுகணைகளை இஸ்ரேல் நகரங்களை தாக்கினாலும், பல ஏவுகணைகளை (Missile Attack) வானிலேயே இஸ்ரேல் படை எதிர்ப்பு ஏவுகணை மூலமாக தாக்கி அழித்தது. All India Chess Federation: மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் எதிரொலி: உலக செஸ் கேட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகியது இந்தியா..! 

இருதரப்பிலும் போர் உச்சம் பெற்றுள்ள நிலையில், அமெரிக்கா (America) இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கி ஆயுத தளவாடங்களை வழங்கி வருகிறது. பாலஸ்தீனியத்திற்கு ஆதரவாக ஈராக் மறைமுகமாக ஆயுத விநியோகம் செய்து வருகிறது.

தற்போது பயங்கரவாதிகள் அனைவரும் இஸ்ரேலிய படையினரால் வேட்டையாடப்பட்டு வரும் நிலையில், பாலஸ்தீனிய எல்லைப்பகுதியில் இஸ்ரேல் இராணுவம் முகாமிட்டு இருக்கிறது. விரைவில் அவர்கள் காசா (Gaza Strip) நகருக்குள் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வரை போரின் காரணமாக மத்திய கிழக்கு (Middle East Countries) நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மீட்பு படை விமானங்களுக்கு, இராணுவ விமானங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இப்போரின் காரணமாக இருதரப்பிலும் 3 ஆயிரம் பேர் உயிரிழந்து இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர கொலைகள் செய்து வருகின்றனர். இஸ்ரேல் வான்வழி தாக்குதலை கையில் எடுத்துள்ளது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் போரின் தொடக்கத்தில் எவ்வித முன்னறிவிப்பு இன்றி திடீர் தாக்குதல் நடத்தினர். ஆனால், இஸ்ரேல் அரசு ஹமாஸின் போர் செயல்பாடுகள் காரணமாக, காசா நகரில் தாக்குதல் நடத்தப்படும், பொதுமக்கள் நகரில் இருந்து வெளியேறிவிடுங்கள் என எச்சரித்து தாக்குதலை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.