Tractor Overturned: திருமண வீட்டார் பயணித்த டிராக்டர் கவிழ்ந்து சோகம்; 13 பேர் பலி., 30 பேர் படுகாயம்.!

ராஜஸ்தானில் இருந்து மத்திய பிரதேசம் நோக்கி பயணம் செய்த திருமண வீட்டார், டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Tractor Overturned Accident (Photo Credit: @AdityaRajKaul X)

ஜூன் 03, ராஜ்கர்க் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராஜ்கர்க் (Rajgarh Accident) மாவட்டம், மோதிப்புரா கிராமம் நோக்கி ராஜஸ்தானை சேர்ந்தவ திருமண குழுவினர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் டிராக்டரில் பயணித்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், விபத்தில் பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேற்படி விசாரணை நடந்து வருகிறது. Car Fire Accident: நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்; 4 இளைஞர்கள் உடல் கருகி பரிதாப பலி.. பதறவைக்கும் சம்பவம்.! 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement